சுதர்சன் ஜெயலக்சுமி (தொகுப்பாசிரியர்). சுன்னாகம்: சுன்னாகம் பொது நூலகம், வலிகாமம் தெற்கு பிரதேச சபை, 1வது பதிப்பு, மார்ச் 2022. (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம், 360, பிரதான வீதி).
iv, 40 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ.
சுன்னாகம் பொது நூலகத்தின் சஞ்சிகையாக சித்திரை-ஆடி 2007இல் தனது முதலாவது இதழை ஆண்டுக்கு மூன்று இதழ்கள் என்ற ரீதியில் வெளிக்கொணரும் நோக்கில் ஆரம்பத்தில் வெளியிடப்பட்டுவந்த ‘வெள்ளிமலை” சஞ்சிகை இடையில் வருகை தடைப்பட்டிருந்து மீண்டும் 2017 முதல் ஆண்டு சஞ்சிகையாக வெளிவரத் தொடங்கியது. 2021ஆம் ஆண்டிற்குரிய இவ்விதழில் தொலைதூர வாசிப்பு (ஆ.கர்ணிகா), மரபுரிமைகளைப் பாதுகாப்போம் (இ.மயூரநாதன்), வலைபந்தாட்ட வீராங்கனை செல்வி தர்ஜினி சிவலிங்கம் (திருமதி க.உமாலினி), கொரோனாவே உனக்கொரு தாலாட்டு-கவிதை (உடுவிலூர் கலா), சுன்னாகம் சிவன் சிறுவர் கழகம் (திருமதி கவிதாமலர் சுதேஸ்வரன்), நாவலரதும் சி.வை.தா அவர்களதும் கற்றல் கற்பித்தல் திறன்களின் வரலாற்று வழி (கௌ.சித்தாந்தன்), புத்தசாசனம் மத அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கும் உடுவில் பிரதேச கலாசார மத்திய நிலையத்தின் செயற்பாடுகள் (திருமதி பத்மதேவமலர் மரியதாஸ்), புற்றுநோய் (Dr. Mrs C.Sharly Vijinad), வாசிப்பை நேசிப்போம் (அ.தேனுஜன்), எது துணிவு (சுன்னாகவூர் பா.திவாகரன்), ஆரோக்கியம் தரும் இலைக்கஞ்சி (வைத்திய கலாநிதி ரட்ணாலகி ஜெகநாதன்), நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகவே ஆகிறாய் (க.பிரசாத்) ஆகிய 12 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.