க.பரணீதரன் (தொகுப்பாசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஆடி 2022. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ் பிரின்டேர்ஸ், 10, முருகேசர் ஒழுங்கை, முத்திரைச் சந்தியடி, நல்லூர்).
436 பக்கம், ஒளிப்படங்கள், விலை: ரூபா 1500., அளவு: 29×21 சமீ.
ஜீவநதி கலை இலக்கிய மாத சஞ்சிகை வெளியீட்டாளர்கள் தமது 175ஆவது இதழை (ஆடி 2022) ஈழத்து இலக்கியச் சிற்றிதழ்களின்; சிறப்பிதழாக வெளியிட்டுள்ளனர். ஏற்கனவே கவிதைச் சிறப்பிதழ், பெண் படைப்பாளிகள் சிறப்பிதழ், நாவல் சிறப்பிதழ் எனப் பல்வேறு சிறப்பிதழ்களை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இத்தொகுப்பில் 130 ஈழத்துச் சிற்றிதழ்கள் பற்றிய தகவல், அறிமுகம், வரலாறு என்பன மதிப்பீடுகளாகப் பலரும் எழுதியுள்ளனர். ஈழத்துச் சஞ்சிகை வரலாறு பற்றிய சிறப்புக் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. ஈழத்து இலக்கிய சிற்றிதழ்கள் அறிமுகக் குறிப்பு (சி.ரமேஷ்), புலம்பெயர்ந்த ஈழத் தமிழரின் இதழியற் செயற்பாடுகள் (சு.குணேஸ்வரன்), ஈழத்துப் பெண்நிலைவாத சஞ்சிகைகள் (தி.செல்வமனோகரன்), புத்தளப் பிராந்திய சஞ்சிகைகள் (உடப்பூர் வீரசொக்கன்), மூதூர் பிரதேசத்தில் சிற்றிதழ்கள் ஒரு பார்வை (ஏ.எஸ்.உபைத்துல்லா), அனுராதபுர பிரதேசச் சிற்றிதழ்கள் ஒரு பார்வை (எல்.வஸீம் அக்ரம்), எழுபதுகளில் சிறுசஞ்சிகைகள் (திக்குவல்லை கமால்), சாகாவரம் பெற்ற ஈழத்துத் தமிழ்ச் சஞ்சிகைகளின் பெருந் தொகுப்புகள்: ஒரு விரிவான ஆய்வுக்கான சில குறிப்புகள் (என்.செல்வராஜா), தமிழ் தேசிய விடுதலைப் பயணிப்பில் போர்க்கால இதழ்கள் (க.ஜெபபி) ஆகிய சிறப்புக் கட்டுரைகளுடன் பாரதி, ஞாயிறு, தேன்மொழி, வசந்தம், கலைச்செல்வி, இனிமை, மாதர் மதிமாலிகை, கலாநிதி, மல்லிகை, அக்னி, விவேகி, பாரதி (மண்டூர்), களனி, குமரன், சுடர், அலை, மணிக்கொடி, கலைப்பூங்கா, மலர், கீற்று, நோக்கு, பூரணி, மக்கள் இலக்கியம், மாவலி, எழில், சேமமடு நூலகம், சமர், புதுமை இலக்கியம், உள்ளம், புதுமை, தூது, கொழுந்து, நந்தலாலா, முனைப்பு, பூவரசு, சக்தி, தடாகம், வசந்தம், இதயம், களம், கவிஞன், மேகம், மூன்றாவது மனிதன், தாகம், கவித்தேசம், இருப்பு, பெருவெளி, இளங்கதிர், தீர்த்தக்கரை, கலைமதி, இளம்பிறை, படி, சரிநிகர், தேன்கூடு, இலக்கு, ப்ரவாகம், மறுமலர்ச்சி, தெரிதல், குருதிமலர், புள்ளி, கலைமகள், பூங்குன்றம், சூரியன், கவிதை, அஞ்சலி, திரள், மலைமுரசு, புதுசு, கிறிஸ்தோபகாரி, நாற்று, மாற்றம், இலக்கியச் சிந்தனை, அரும்பு, நூலகவியல், கலை ஓசை, அம்பலம், ஏகலைவன், பூரணி, காற்புள்ளி, நயனம், புலரி, புதிய தரிசனம், உதயம், தளவாசல், தமிழருவி, தூண்டி, வெளிச்சம், யாத்ரா, தவிர, கீறல், தீ, அக்கினிக் குஞ்சு, நடுகை, தாயகம், ஞானம், மாருதம், நாவேந்தன், வசந்தம், மறுகா, காலவெளி, படிகள், வியூகம், தென்றல், மறுபாதி, காகித மலர், தாரகை, வடம், பயில்நிலம், திசை புதிது, ஆகவே, செங்கதிர், சிரித்திரன், கலைமுகம், ஜீவநதி, மகுடம், அமுதநதி, பூங்காவனம், எங்கட புத்தகங்கள்;, எங்கள் முற்றம், நீங்களும் எழுதலாம், சுட்டும் விழி, கலைமதி, புதிய சொல், விளக்கு, சிறகுகள், சுவர், பகுத்தறிவு, நினைவு, வயல், சுந்தரன் ஆகிய 130 சிறு சஞ்சிகைகள் பற்றிய கட்டுரைகள் இச்சிறப்பிதழில் இடம்பெற்றுள்ளன.