16028 நினைவுக் காப்பகம் : எழுபது வருடகால சுதந்திரத்தை மீள்பார்வையிடல்.

மாலதி டி அல்விஸ், ஹசினி ஹப்புத்தந்திரி (தொகுப்பும் பதிப்பும்), ஷானி ஜயவர்த்தன (புகைப்படங்கள்). கொழும்பு: Historical Dialogue.lk , 1வது பதிப்பு, 2019. (கொழும்பு: Leaf D (Private) Limited).

(7), 8-155 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25.5×28.5 சமீ.

அறிமுகம், சேகரிப்புகள் தொடர்பான குறிப்பு, வெள்ளிக் காப்பு, கயிறு, பாரம் குறைந்த விமானம், பேப்பர் கோன், வெள்ளை கடிலக், வசம்பு, துட்டகைமுனு சிலை, ரிப்போர்ட் காட், சிலேட் பென்சில், ‘அப்பி சிங்கள” பலகை, பின் தாழிய, வொயில் சாரி, ஐஸ் சொக், பிரம்புக் கதிரை, சுண்ணாம்புக் குப்பி, திருமண நெக்லஸ், மாட்டிறைச்சி லம்பிறைஸ், குதிரைப் பந்தய தாள்கள், லைசென்ஸ் பிளேட், ஆஸ்மி, பாண், இறப்பர் விதைகள், ஜீஜீப்ஸ், மூக்குக் கண்ணாடி, நோட்டுப் புத்தகம், பிலிங் மரம், கைக்கடிகாரம், காளான், பொட்டு, பாண் சான்ட்விச், தண்ணி ஜொக், தேங்காய் சிரட்டை, பவன கேசட், துவக்கு, சாரி முந்தானை, வால்வ் ரேடியோ, வு-56, மண் சட்டி, தொங், அம்மி, ஆங்கில அகராதியும் பைபிளும், சட்டி, சங்கிலியும் காப்புகளும், பியானோ, மீன் பணிஸ், சுழியோடிகளுக்கான கையேடு, பொலிஸ் பதிவு, சின்னஞ்சிறிய சப்பாத்து, மாசிச் சம்பல், கிளாஸ் கப், கிறிஸ்மஸ் மரம், சாப்பாட்டுத் தட்டு, ஊஞ்சல், சில்வர் புரோச், ஹான்ட் பாக், ஸ்கூல் பாக், ஸ்டெதஸ்கோப், வெள்ளைவான், நோ லிமிட் பாக், ட்ரக்டர், போர்ட் எஞ்சின், பறை மேளம், தேத்தண்ணி கப், அரச மரம், சாவிக்கொத்து, சப்பாத்து, தேயிலைச் சாயப் பைகள், தங்க மயில், தேர்தல் போஸ்டர், சூட்கேஸ் ஆகிய தலைப்புகளுடன் கூடிய புகைப்படங்களும், அப்பொருட்கள் தொடர்பான தனிப்பட்ட எழுத்தாளர்களின் நினைவு மீட்டல்களும் எம்மை சுதந்திரத்திற்குப் பின்னரான கடந்த எழுபதாண்டு வாழ்க்கைப் பயணத்தை மீள நினைந்துருக இந்நூல் வழிசெய்துள்ளது. உதாரணத்திற்கு, ‘அப்பி  சிங்கள” பலகை – ஒரு வீட்டின் கேற்றில் கறுப்பு மையினால் எழுதப்பட்டு தொங்கவிடப்பட்டுள்ள புகைப்படத்துடன் கூடிய விவரணத்தின்படி அது 1983 ஜீலை கலவர காலத்தில், ஒரு இஸ்லாமிய குடும்பத்தவரின் வீட்டு கேற்றில் தொங்கவிடப்பட்டிருந்துள்ளது. இவ்விவரணம் எமக்கு ஜீலை 1983 இன அழிப்பின் சமூகவியலை மீள்நினைவூட்டுகின்றது. 

ஏனைய பதிவுகள்

Internet casino Australia

Content Positives and negatives Away from Playing On the Casino Applications Bonuses And will be offering From the Shell out Letter Enjoy Casinos Mention Different