16033 அன்பின் திசைகள்: காலத்தின் ஒளியும் நிழலும் படிந்த பதிவுகள்.

கருணாகரன். கிளிநொச்சி: மகிழ் பதிப்பகம், 754, கனகராசா வீதி, திருநகர் வடக்கு, 1வது பதிப்பு, டிசம்பர் 2018. (தெகிவளை: T.G. அச்சகம்).

xi, 148 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 23×15 சமீ., ISBN: 978-955-43287-1-6.

இயக்கச்சியில் பிறந்த சிவராசா கருணாகரன் தற்போது கிளிநொச்சியில் வசித்து வருகிறார். இதுவரை இவரது ஏழு கவிதை நூல்கள் (ஒரு பொழுதுக்குக் காத்திருத்தல்,  ஒரு பயணியின் நிகழ்காலக் குறிப்புகள், பலியாடு, எதுவுமல்ல எதுவும், ஒரு பயணியின் போர்க்காலக் குறிப்புகள், நெருப்பின் உதிரம், இரத்தமாகிய இரவும் பகலுமுடைய நாள், படுவான்கரைக் குறிப்புகள்) வெளியாகியுள்ளன. வேட்டைத் தோப்பு என்ற சிறுகதைத் தொகுதியும், இப்படி ஒரு காலம் என்ற கட்டுரை நூலும், புகைப்படக்காரன் பொய்சொல்ல முடியாது என்ற நேர்காணல்களின் தொகுப்பொன்றும் பிரசுரமாகியிருக்கின்றன. இது இவருடைய பதினொராவது நூலாகும். பத்தி எழுத்துக்களைக் கொண்ட இந்நூலில் உள்ள ஆக்கங்கள் தமிழ் மிரர், புது விதி, எதிரொலி, ஆகிய பத்திரிகைகளிலும், தேனீ உள்ளிட்ட சில இணையத் தளங்களிலும் வெளியானவை. நம் காலத்தின் ஒளியும் நிழலும் படிந்த படித்துறையே இந்தப் பதிவுகள். இவை, நாம் பொதுவாக அறிந்தவற்றினுள்ளே அறியாதிருக்கும் பகுதிகளைக் காட்டி நமது புலன்களைத் திறக்க முற்படுகின்றன. நம்மை அறியாமலே நாம் வெவ்வேறு திசைகளில் யார் யாரோவினால் எல்லாம் வழி நடத்திச் செல்லப்படுகிறோம் என்பதைச் சொல்லி, நம்மை அதிர்ச்சியடைய வைக்கின்றன. பழங்களின் படையெடுப்பு, தமயந்தியின் கண்ணீர், பன்னிரண்டு தோழர்கள், பவுண், பேய்முனை, பாரதியின் பொங்கல், றோ, றஞ்சியின் கதை, நினைத்ததை முடிப்பவன், அன்னமிட்ட கைகள், யானை பார்த்த கதை, பெனிலோப் ஈவா வில்லிஸ், பந்து, கறுப்புக் காட்டில், பன்றிக் கருக்கல், நகர மறுக்கும் நகர், கணக்குகள் தீர்க்கப்படும், கேப்பாப்பிலவு விமானநிலையம், காணாமல் போனவர்கள் ஆகிய தலைப்புகளில் இப்பத்தி எழுத்துக்கள் அவ்வப்போது எழுதப்பட்டவை. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 70064).

ஏனைய பதிவுகள்