16035 நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்.

ஓட்டமாவடி அறபாத். நாகர்கோவில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, 1வது பதிப்பு, டிசம்பர் 2017. (சென்னை 600077: மணி ஓப்செட் பிரின்டர்ஸ்).

160 பக்கம், விலை: இந்திய ரூபா 180., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-86820-28-0.

1996இல் ‘எரிநெருப்பிலிருந்து” என்ற கவிதைத் தொகுதி மூலம் அறிமுகமான கிழக்கிலங்கையின் ஓட்டமாவடியைப் பிறப்பிடமாகக் கொண்ட அறபாத் கலைப்பட்டதாரியும் பயிற்றப்பபட்ட மௌலவியுமாவார். அரச பணியாற்றிவரும் இவர் இருபது வருட எழுத்தூழியத்தின் மூலம் தன்னை முழுமையாக அடையாளப்படுத்திக் கொண்டவர். இந்நூல் ‘எங்கள் தேசம்” பத்திரிகையில் பிரசுரமான இவரது ஐம்பது பத்தி எழுத்துக்களின் தொகுப்பாக வெளிவருகின்றது. ‘ஐம்பது அத்தியாயங்களில் சுழிவிட்டுக் குதூகலிக்கும் நினைவோடைகளில் சொட்டும் நீர்த்திவலைகளை ஒரு சரமாக வடிவமைத்திருக்கிறார். அவரின் அனுபவங்களை நமது அனுபவங்களாக மாற்றும் வித்தை அவருக்கு கைகூடி வந்திருக்கிறது. அறபாத்தின் ஒவ்வொரு காலடி மண்ணின் ஈரமும், அதன் வாசனையும் ஒவ்வொரு பத்தியிலும் கண்சிமிட்டி களிப்பூட்டுகிறது.” (எஸ். எல். எம். ஹனீபா).

ஏனைய பதிவுகள்