16066 அகஸ்தியர் புஷ்ப ஆரூடம்.

அகஸ்தியர் (மூலம்). கொழும்பு 11: சரஸ்வதி புத்தகசாலை, 175, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு 11: மெய்கண்டான் அச்சியந்திரசாலை, 161, செட்டியார் தெரு).

64 பக்கம், விலை: ரூபா 1.25, அளவு: 18×12 சமீ.

இந்நூலில் அறுபது பூக்கள் பட்டியலிடப்பட்டு இலக்கமிடப்பட்டுள்ளன. தொடர்ந்து பக்கத்துக்கு ஒன்றென்ற ரீதியில் ஒவ்வொரு பூவின் பெயரில் ஆரூடம் சொல்லப்பட்டுள்ளது. 60 பூக்களில் ஒரு பூவை அல்லது 1 முதல் 60க்கு இடைப்பட்ட ஒரு இலக்கத்தை தெரிவுசெய்து அந்த இலக்கத்துக்குரிய, அல்லது அந்த இலக்கத்துக்குரிய பூவிற்குரியதெனச்  சொல்லப்பட்ட நன்மை தீமைகளை (ஆரூடத்தை) வாசித்துத் தெரிந்துகொள்வர். பூக்களின் பட்டியல்: 1.அல்லிப்பூ, 2.அசோகு, 3. அவ்வலரி, 4.அழவனப்பூ, 5.இருவாக்ஷி, 6.எருக்கன்பூ, 7.கஸ்தூரிப்பட்டை, 8.கதிர்ப்பச்சை, 9.கனகாம்பரம், 10.காட்டுரோஜா, 11.குண்டுமல்லி, 12.குருவேர், 13.கொடிமல்லி, 14.கொங்குமல்லி, 15.கொடிசம்பங்கி, 16.கொன்றைமலர், 17.சப்பாத்திப்பூ, 18.சரக்கொண்ணை, 19.சம்பங்கி, 20.சாமந்தி, 21.சூரியகாந்தி, 22.செவ்வலரி, 23.செந்தாமரை, 24.செண்பகம், 25.தவனம், 26.தாழம்பூ, 27.துலக்கும் சாமந்தி, 28.நந்தியாவட்டை, 29.நாகமல்லி, 30.நித்தியமல்லி, 31.நிலாம்பரம், 32.பத்திராக்ஷிப்பூ, 33.பன்னீர்புஷ்பம், 34.பழகமல்லி, 35.பட்டுரோஜா, 36.பாதிரிமலர், 37.பாரிஜாதம், 38.புன்னைமலர், 39.மல்லிகை, 40.மனோரஞ்சிதம், 41.மருவு, 42.மரிக்கொழுந்து, 43.மயில்கொண்ணை, 44.மஞ்சள்ரோஜா, 45.மரமல்லி, 46.மஞ்சாம்பரம், 47.மகுடம்பூ, 48.மன்மதபாணம், 49.மந்தாரை, 50.முல்லை மலர், 51.லேடிகனகாம்பரம், 52.வளைஞ்சாம்பரம், 53.வாடாமல்லி, 54.வெண்சாமந்தி, 55.வெண்தாமரை, 56.வெட்டிவேர், 57.வெள்ளைரோஜா, 58.ரோஜமலர், 59.ஜாதிமல்லி, 60. டிசம்பர் புஷ்பம்.

ஏனைய பதிவுகள்

Online Slots Gratis Acteren

Capaciteit Gratis Rechtstreeks Spelen, Genkel Download Benodigd – Cashapillar gokkast gratis spins Slots Met Geheel getal Wentelen 5 Reel Slots Pragmatic Play Gokkasten Jou kan