செ.லோகராஜா. மட்டக்களப்பு: திருமதி பரமேஸ்வரி லோகராஜா, 14/3, A-4, கணக்குப்பிள்ளை வீதி, நாவற்குடா, 1வது பதிப்பு, மாசி 2017. (திருக்கோணமலை: அஸ்ரா கிராபிக்ஸ்).
xxviii, 79 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 17×12 சமீ., ISBN: 978-955-43127-3-9.
இந்நூலில் மனையடி சாஸ்திரம் பற்றிய விளக்கத்தினையும் அனுசரிக்கவேண்டிய வாஸ்து நிலைமைகளையும், மனைகோல கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளையும் ஆசிரியர் விளக்கமாகத் தந்துள்ளார். வீடு கட்டும் மனையின் தன்மை, மண்ணின் தன்மை, வீடு கட்டுவதற்கு ஆகாத மனைகள், மனைக்குரிய திசைகள், மனையில் எதை எங்கே அமைக்க வேண்டும், சகுனங்கள் பார்த்தல், மனை அமைப்புக்கான வாரம், திதி, நட்சத்திரம், இராசி, மாதப் பலன்கள், வீடுகளின் அளவு முறைகள், வீட்டின் அறைகள், கூடங்கள் ஆகியவற்றுக்கு உகந்த அளவுகள், வீட்டின் அறை, கூடங்களின் அடி, அளவின் பலன்கள், வாஸ்து தேவன் ஓர் அறிமுகம், வாஸ்து தேவனின் நிலையறிந்து மனை கோலுதல், வாஸ்து நிலைப்படி மனை கோலுவதற்கு உகந்த நேரங்கள், வாஸ்து தேவனை வழிபாடு செய்தல், வாஸ்து விளைவுகள், வாஸ்து தேவன் நிலையறிந்து வாசல் வைத்தல், கிரக நிலை அறிந்து வாசல் அமைத்தல், கதவுகள் அமைத்தல், ஜன்னல்கள் அமைத்தல், படிக்கட்டுகள் அமைத்தல், நீர்த் தொட்டில்கள் அமைத்தல், சயன அறை, சமையல் அறை, பூசை அறை, கருவூல அறை, படிக்கும் அறை, குளியல் அறை மற்றும் கழிவறை, அறைகளின் உள்ளமைப்பு, மாடிக் கட்டடங்கள், மனைகோல அனுசரிக்க வேண்டிய விதிமுறைகள் ஆகிய முப்பது தலைப்புகளில் மனையடி சாஸ்திரமும் வாஸ்து நிலையும் விரிவாகவும் தெளிவாகவும் விளக்கப்பட்டுள்ளது. முன்னம்பொடி வெட்டையைச் சேர்ந்த கலைமாறன் என்ற புனைபெயருடன் அழைக்கப்பட்டு வரும் லோகராஜா, மூதூர் கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளராகவும், ஈச்சிலம்பற்று கோட்டக் கல்விப் பணிப்பாளராகவும் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.