16070 திருமறையின் வரலாற்றில் இடம்பிடித்த பெண்கள்.

சிபில் தேவகி ஞானப்பிரகாசம் (ஆசிரியர்). சுன்னாகம்: அருட்பணி ஜோசப் ஞானப்பிரகாசம், உவெல்ச் இல்லம், கிறிஸ்தவ இறையியல் கல்லூரி, மருதனார்மடம், 1வது பதிப்பு, 2022. (ஆனைக்கோட்டை : றூபன் பிரிண்டர்ஸ்).

xxiii, 150 பக்கம், ஒளிப்படங்கள், விலை: ரூபா 1000., அளவு: 22×14 ISBN: 978-624-99715-0-9.

இது கிறிஸ்தவ சமூகத்தினருக்குப் பயனுள்ள வரலாற்று நூல். இரண்டு அத்தியாயங்களில் எழுதப்பட்டுள்ளது. முதலாவது அத்தியாயத்தில் பழைய ஏற்பாட்டின் வரலாற்றில் இடம்பிடித்த பெண்கள் என்ற வரையறைக்குள் ஏவாள், நோவாவின் மனைவி, சாராள், ஆகார், ரெபேக்காள், லேயாள், மில்க்காள், லோத்தின் மனைவி, போத்திப்பாரின் மனைவி, மிரியாம், சிப்பீராள் பூவாள், சிப்போராள், யோகெபேத், செலோபியாத்தின் குமாரத்திகள், அக்சாள், ராகாப், யாகேல், சிம்சோனன் தாய், யெப்தாவின் மகள், தெபோராள், ரூத்-நகோமி, ஓர்பாள், பெனின்னாள், அபிகாயில், மீகாள், அன்னாள், ரிஸ்பாள், சேபா நாட்டு அரசி, சாறிபாத் ஊர் விதவை, யெசபேல், உல்தாள், தீர்க்கதரிசியின் மனைவி, சிறைபிடிக்கப்பட்ட சிறுபெண், சூனேமியாள், யோசேபாள், எப்சிபாள், ஜெரூசா, சிபியாள், அசுபாள், நொவதியாள், எஸ்தர், சிரேஸ், வஸ்தி, யோபுவின் மனைவி, குணசாலியான பெண், சூசன்னாள் ஆகிய 46 பெண்கள் பற்றிய விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. இரண்டாவது அத்தியாயத்தில் புதிய ஏற்பாட்டின் வரலாற்றில் இடம்பிடித்த பெண்கள் என்ற வரையறைக்குள் இயேசுவின் தாய் மரியாள், மகதலேனா மரியாள், பேதுருவின் மாமி, ஏரோதியாள், சாலோமி, கானானியப் பெண், பொந்தியு பிலாத்துவின் மனைவி, யவீருவின் மகள், சலோமே, பெரும்பாடுள்ள பெண், அன்னாள், கூனியான பெண், பாவியான பெண், யோவன்னாள், ஏழைக் கைம்பெண், சூசன்னாள், எலிசபெத், கிலேயோப்பா மரியாள், மார்த்தாள் மரியாள், விபச்சாரப் பெண், சமாரியப்பெண், மாற்குவின் தாய் மரியாள், லீதியாள், தபீத்தாள், சப்பீராள், ரோதை, குறி சொல்லுகிற பெண், பிரிஸ்கில்லாள், பெபேயாள், ஜனிக்கேயாள், லோவிசாள் ஆகிய 29 பெண்கள் பற்றிய விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் பெண்கள் கல்லூரியில் கற்று, திருநெல்வேலி விவசாயப் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெற்றபின் சிறப்புப் பயிற்சியினை பலாலி ஆசிரிய பயிற்சிக் கல்லூரியில் பெற்றுக்கொண்டவர் ‘போதகரம்மா” என அன்பாக அழைக்கப்படும் சிபில் தேவகி ஞானப்பிரகாசம் அவர்கள்.

ஏனைய பதிவுகள்

Sans Annales Canada

Content Les Critères A Protéger Des Bonus Sans nul Archive Simsino Casino Pourboire Sans Archive gratuitement , ! Chiffres Marketing Hollande Enjeu Pardon Dénicher Le