எம்.மார்க் அல்ரோய் (மூலம்), நெப்போலியன் பத்மநாதன் (பதிப்பாசிரியர்). பிரான்ஸ்: வண. கிங்ஸ்லி பாலேந்திரா ஜோசப், பிலடெல்பியா மிஷனரி, 1வது பதிப்பு, மார்ச் 2022. (நுகேகொடை: தோமஸ் மில்டன் ஊழியங்கள், இம்பிரஷன் பிரின்டர்ஸ், 119, கங்கொடவில, நுகேகொடை).
xi, 222 பக்கம், ஒளிப்படம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22.5×15.5 சமீ., ISBN: 978-955-7772-05-9.
வேதத்தை இலகுவாகவும் ஆழமாகவும் கற்கவும் அதை வாழ்க்கைக்கு பயன்படுத்த உதவுவதுமே சர்வதேச தமிழ் புதிய ஏற்பாட்டு விளக்கவுரைகளின் நோக்கமாகும். சாதாரண கிறிஸ்தவர்களும், முழுநேர ஊழியர்களும், போதகர்களும், இறையியல் மாணவர்களும் வாசித்து பயன்பெறக்கூடிய வகையில் எழுதப்பட்டிருக்கும் இந்த விளக்கவுரைகள் பல தசாப்தங்களுக்கு பலருடைய வாழ்வையும் அறிவையும் தேவனை நோக்கித் திருப்பும் என்பதே இவ்வமைப்பினரின் நம்பிக்கை. சிறையிலிருந்து எழுதப்பட்ட பல சிறப்பான சத்தியங்களை உள்ளடக்கிய பிலிப்பியர் நிருபத்தை எளிதாகப் புரிந்து கிறிஸ்துவின் சிந்தையை பற்றிக்கொண்டு பயணிக்க உதவும் நூல். ஆசியாவில் பல கல்லூரிகளில் இறையியல் கற்பிக்கும் முனைவராகப் பணியாற்றியவர் மார்க் அல்ரோய் மஸ்கிறேஞ்ஞ (Mark Alroy Mascrenghe).