16073 ஒப்புரவின்றி எதிர்காலம் இல்லை (இறையியல் கட்டுரைகள்).

அருட்பணி அ.ஸ்ரீபன் (மூலம்), வி.பி.தனேந்திரா(பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: ராதவல்லி வெளியீடு, அரியாலை மேற்கு, 1வது பதிப்பு, மே 2012. (அச்சக விபரம் தரப்படவில்லை)

76 பக்கம், விலை: ரூபா 100.00, அளவு: 21×14.5 சமீ.

திருமறை கிறிஸ்தவ வாழ்விற்கு முக்கியமான ஓர் ஏடாகக் காணப்படுகின்றது. திருமறையை விளக்க வேதாகம விளக்கவுரைகள் பயன்படுகின்றன. இந்நூலில் உள்ள கட்டுரைகளும் வேதாகமப் பகுதிகளுக்கான ஒரு விளக்கவுரையாக அமைகின்றது. அருள்பணி அ.ஸ்ரீபன் அடிகளார் பிலிமத்தலாவ இறையியல் கல்லூரியில் விரிவுரையாளராக 2010 முதல் பணியாற்றி வருகின்றார். இவர் நல்லூர் புனித யாக்கோபு ஆலயத்தின் பங்குத் தந்தையாக பணியாற்றிய 2004-2009 காலப்பகுதியில் பல்வேறு கிறிஸ்தவ அமைப்புகளிலும் தன்னை இணைத்துக்கொண்டு பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத் தக்கது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 51604).

ஏனைய பதிவுகள்

Buffalo Position Comment 2024

Content Pied piper online slot: Popular features of Totally free Slot machines Instead of Downloading Or Registration Ideas on how to Play 100 percent free