16074 பௌத்தம் சிறந்த வினா-சிறந்த விடை.

குரு எஸ்.தம்மிக்க (ஆங்கில மூலம்), தி.சுகுணன் (தமிழாக்கம்). தெகிவளை: பௌத்த கலாச்சார நிலையம் (Buddhist Cultural Centre), 125, அன்டர்சன் வீதி, நெடிமல, 1வது பதிப்பு, 2016. (மஹரகம: Ad Arts, இல. 110A, 1/1, பழைய கொட்டாவ வீதி).

ix, 114 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×15.5 சமீ., ISBN: 978-955-663-527-0.

அவுஸ்திரேலிய நாட்டு பௌத்த அறவண அடிகளான வணக்கத்துக்குரிய சிராவஸ்தி தம்மிக்க பாந்தே அவர்கள் எழுதிய Good Question Good Answer என்ற ஆங்கில நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு இதுவாகும். பௌத்தம் என்றால் என்ன?, பௌத்த அடிப்படைக் குறிக்கோள்கள், பௌத்தமும் கடவுள் கொள்கையும், ஐந்து நல்லொழுக்கப் போதனைகள், மறு பிறப்பு, தியானம், மெய்யறிவும் இரக்கவுணர்வும், மரக்கறி உணவுமுறை, நல்லதிர்ஷ்டமும் விதியும், ஆண் மற்றும் பெண் துறவிகள், பௌத்த சமய நூல்கள், பௌத்த வரலாறும் வளர்ச்சியும், பௌத்தராக மாறுவது, புத்தரின் பொன்மொழிகள் ஆகிய 14 அத்தியாயத் தலைப்புகளில் இந்நூல் விரிந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

17938 தமிழ்த் தொண்டாளர் கவிமணி த.துரைசிங்கம்.

அந்தனி ஜீவா (தொகுப்பாசிரியர்). கொழும்பு 6: மலையகக் கலை இலக்கியப் பேரவை, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2015. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை). 16 பக்கம், விலை: