கார்த்திகா கணேசர். சென்னை 600002: காந்தளகம், 68, அண்ணா சாலை, 1வது பதிப்பு, ஜனவரி 2022. (சென்னை 600002: காந்தளகம், 68, அண்ணா சாலை).
(3), 135 பக்கம், புகைப்படம், விலை: இந்திய ரூபா 150., அளவு: 22.5×15 சமீ., ISBN: 978-81-897-0881-8.
நூலாசிரியர் நாட்டியக் கலாநிதி கார்த்திகா கணேசரின் பவளவிழா ஆண்டுச் சிறப்பு வெளியீடாக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. சிந்தனை வளர்ச்சி, இருக்கு வேதம், சிவலிங்கம், தைத்திரேய உபநிடதம் கூறும் ஐந்து கோஷங்கள், உடல் மெய், காமசூத்திரம், கஜறாஹோ, யோகம், மௌனம், குரு சிஷ்யப் பாரம்பரியம், இந்து மதச் சிந்தனைகள், இந்தியப் பாரம்பரிய அறிவியல் அறிவு, சூரிய சித்தாந்தம், சித்திரைப் புத்தாண்டு, கௌதமர், பௌத்தம் எவ்வாறு இந்தியாவிலிருந்து வெளியேறியது?, நடராசர் தாண்டவமும் தத்துவார்த்தப் பின்னணியும், இயக்கத்தின் வடிவமே நடராச மூர்த்தி ஆகிய 18 கட்டுரைகள் இந்நூலில் அடங்கியுள்ளன. அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்து வாழும் நாட்டிய கலாநிதி திருமதி கார்த்திகா கணேசர், யாழ்ப்பாணம் இணுவில் மகாவித்துவான் ந.வீரமணி ஐயர் அவர்களிடம் நாட்டியக்கலை பயின்று பின்னர் தமிழ்நாட்டு வழுவூர் இராமையா பிள்ளையிடம் அவரது வீட்டிலேயே குருகுலவாசம் செய்து முறைப்படி நடனத்தைப் பயின்றவர். இவரது நாட்டியத் திறமைக்குப் பரிசாகத் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை விருது, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் விருது, இலங்கை இந்து கலாசார அமைச்சின் ‘நாட்டிய கலாநிதி” விருது ஆகியவற்றைப் பெற்றவர்.