16076 கணபதி பூஜா மந்த்ர கோஷம்.

கோப்பாய் சிவம் (இயற்பெயர்: பிரம்மஸ்ரீ ப.சிவானந்த சர்மா). யாழ்ப்பாணம்: சர்வானந்தமய பீடம், ஸ்ரீ நகரம், அளவோடை வீதி, இணுவில் மேற்கு, சுன்னாகம், மீள் பதிப்பு, ஜீலை 2020, 1வது பதிப்பு, மே 2020. (சுன்னாகம்: ஸ்ரீவித்யா கணனி அச்சகம், இணுவில்).

160 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 26.5×18.5 சமீ.

நூலின் தலைப்பு உள்ளே ‘விநாயகபூஜா மந்த்ர கோஷம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. விநாயகருடன் தொடர்பான தியானங்கள், தோத்திரங்கள், வேத மந்திரங்கள் முதலியவற்றின் தொகுப்பு. விநாயகர் வழிபாடு-தகவல் தொகுப்பு, யாக மண்டப பூஜை, விநாயகரின் பல்வேறு தியானங்கள், விநாயகரின் பல்வேறு மந்திரங்கள், விநாயகருக்குரிய வேத மந்திரங்கள், விநாயகரின் பல்வேறு ஸ்தோத்திரங்கள், விநாயக சதுராவிர்த்தி தர்ப்பணம் ஆகிய அத்தியாயங்களை இந்நூல் கொண்டுள்ளது. விடயதானங்கள் சம்ஸ்கிருதம்-தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் இடம்பெற்றுள்ளன. இந்நூலின் முதற் பதிப்பு, 18.05.2020 அன்று அமரர் ஸ்ரீமதி கிருஷ்ணமூர்த்தி ஐயர் யோகநந்தினி அம்மா நினைவாக அவரது குடும்பத்தினரால் அன்பளிப்புப் பிரதியாக வெளியிடப்பட்டது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 70029).

ஏனைய பதிவுகள்