16082 இணுவில்-கோண்டாவில் காரைக்கால் சிவாலய வரலாற்றுப் பதிவுகள்.

மூ.சிவலிங்கம். யாழ்ப்பாணம்: சைவத் திருநெறிக் கழகம், இணுவில், 1வது பதிப்பு, மார்கழி 2021. (யாழ்ப்பாணம்: சுடர்நிலவு கிராப்பிக்ஸ், இணுவில்).

xxiv, 136 பக்கம், விலை: ரூபா 450., அளவு: 21.5×15.5 சமீ.

யாழ்ப்பாண மாவட்டத்தில் இணுவில், கோண்டாவில், உரும்பிராய் ஆகிய மூன்று ஊர்களின் எல்லையில் அமைந்துள்ள ஊர் காரைக்காலாகும். ஆதிகால சிவன் கோவிலின் இருப்பிடம் இதுவாகும். இந்நூல் இச்சிவாலய வரலாற்றை விரிவாகப் பதிவுசெய்துள்ளது. ஆதி முதல் 1875 வரை, பெரிய சந்நியாசியாரின் அவதாரமும் பணிகளும், தேரோடும் வீதிக்குக் குறுக்கேயுள்ள தடைநீக்கம், இணுவில் கந்தசுவாமி கோவிலிலிருந்து காரைக்காலுக்கு ஏழு தேர்ப் பவனி, பெரிய சந்நியாசியாரின் இறுதிக் காலம், பெரிய சந்நியாசியாரின் பிற்பட்ட காலம், இடைக் காலத்தில் ஏற்பட்ட மாற்றமும் பூசைகளும், அம்பலவாணர் சுவாமிகளின் அறிமுகம், சுவாமிகளின் ஆரம்பகால ஆலயப்பணி, சுவாமிகளின் வாழ்வாதாரமும் பணிகளும், சுவாமிகளின் அருட்பணியால் வளர்ந்த ஆலயத் திருப்பணி, காரைக்கால் சிவாலயத்தின் பூசைகள், விழாக்கள், பெருவிழாக்களுக்கான ஏற்பாடுகளும் பெருவிழாக்களும், காரைக்கால் அம்பலவாணர் சுவாமிகளின் காலத்துப் பெருவிழாச் சிறப்புகள், சுவாமிகளின் காலத்துப் பெருவிழாவில் சமய நிகழ்வுகள், அம்பலவாணர் சுவாமிகளின் இணுவில் கந்தசுவாமி கோயிற்பணிகள், சுவாமிகளின் இறுதிக் காலம், பெரிய சந்நியாசியாரும் அம்பலவாணர் சுவாமிகளும் ஒரே நோக்கில், அம்பலவாணர் சுவாமிகளின் காலத்திலிருந்து பூசைகள் விழாக்களை அலங்கரித்த பூசகர்கள், சிவாச்சாரியார்கள், காரைக்கால் சிவாலயத்தின் தொண்டர்கள், நிறைவாக, நாதர்முடி மேலிருக்கும் நல்ல பாம்பு, திருவூஞ்சல் பாடல் ஆகிய 23 தலைப்புகளில் இந்நூல் விரிவாக எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Slots Busca

Content O E São Os Giros Acostumado? | Adiantamento em dinheiro de cassino online Gratowin E Aparelhar Jogos Criancice Caça Arame Dado Esfogíteado House Of

16040 மௌன அலைகள் : நிலம் தொட்டு புகலிடம் வரையான உளவியல் பிரச்சினைகள்.

நோர்வே விஜேந்திரன். முல்லைத்தீவு: செல்லமுத்து வெளியீட்டகம், வள்ளுவர்புரம், விசுவமடு, 1வது பதிப்பு, ஆனி 2019. (யாழ்ப்பாணம்: பகவான் பிரின்டர்ஸ், சித்தன்கேணி). xx, 100 பக்கம், விலை: ரூபா 270., அளவு: 20×14 சமீ., ISBN: