16084 கிராமிய மண்ணில் முருகன் ஆலயங்கள் மூன்று.

மூ.சிவலிங்கம். யாழ்ப்பாணம் : கலாபூஷணம் மூ.சிவலிங்கம், இணுவில் சைவத் திருநெறிக் கழகம், காரைக்கால் வீதி, இணுவில் கிழக்கு, இணுவில், 1வது பதிப்பு, மே 2016. (இணுவில்: வைரஸ் பிரின்டர்ஸ்).

xxx, 254 பக்கம், விலை: ரூபா 650., அளவு: 24.5ஒ18 சமீ., ISBN: 978-955-44538-1-4.

ஆசியுரைகள், வாழ்த்துரைகள், முருகன் பாடல்கள், அணிந்துரைகள், முன்னுரை ஆகியவற்றுடன் முருகப் பெருமானின் தோற்றத்தில் சிவதத்துவங்கள், முருகனின் திருவிளையாடல்களும் கந்தபுராண கலாசாரமும் ஆகிய இரண்டு கட்டுரைகளுடன் விரியும் இந்நூலில் இணுவில் கந்தசுவாமி கோயில், மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில், செல்வச்சந்நிதி முருகன் ஆலயம் ஆகிய மூன்று முருகன் ஆலயங்கள் பற்றிய விரிவான தலவரலாறுகளுடன் கூடிய பல்வேறு வரலாற்றுத் தகவல்களும் காணப்படுகின்றன. நூலாசிரியர் நீண்டகாலமாக கிராம அலுவலர் பணியை மேற்கொண்டிருந்தமையால், கிராமங்களும், கிராம நிறுவனங்களும், ஆலயங்களும் தொடர்பான நுண்பாகத் தகவல்களுடன் உறவாடியவர். அந்தப் பயிற்சி இந்நூலாக்கத்திற்குரிய அறிகைப் பின்புலத்தை அவருக்கு வழங்கியுள்ளது.

ஏனைய பதிவுகள்

16218 இலங்கைத் தமிழர்களின் புலம்பெயர்வும் வாழ்வியலும்.

தம்பையா அரியரத்தினம். கொழும்பு : க.அரியரத்தினம், ஓய்வு நிலை அதிகாரி, ஸ்ரீலங்கா திட்டமிடல் சேவை, 1வது பதிப்பு, 2022. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி). 110 பக்கம், விலை: