16087 திருக்கோணேஸ்வரம்.

சி.பத்மநாதன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2022. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).

xxvi, 206 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 950., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-758-5. புராணங்களில் இடங்கொண்ட புராதன தலம், திருகோணமலையிற் சோழரின் திருப்பணிகள், குளக்கோட்டனும் ஆலய தருமங்களும், கஜபாகு மன்னனின் திருப்பணிகள், காலிங்கராயன் அமைத்த திருக்காமக்கோட்டம், கோகர்ணத்திற் சோடகங்கன், மானியங்களும் கோயில் நிர்வாகமும், திருகோணமலையின் பகோடா, சுவாமி மலையில் வழிபாடு, சுவாமி மலையில் ஆலய புனருத்தாரணம், திருகோணமலையிற் கிடைத்த வெண்கலப் படிமங்கள் ஆகிய 11 இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. பின்னிணைப்புகளாக வன்னிபங்களும் கோயில் நிர்வாகமும், கோட்டைவாசல் தமிழ்க் கல்வெட்டு, திருக்கோணேஸ்வரத்தைக் குறிக்கும் பக்திப் பாடல்கள், தக்ஷிணகைலாச மஹாத்மியத்தில் திருக்கோணேஸ்வரம், பேராசிரியர் சுப்பராயலு படித்து வடிவமைத்த சாசன வாசகம் ஆகியவை தரப்பட்டுள்ளன. பேராசிரியர் சி.பத்மநாதன் இலங்கையின் தலைசிறந்த வரலாற்றறிஞர்களில் ஒருவர். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இளமாணிப் பட்டத்தையும், இலண்டன் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டத்தையும் பெற்றவர். இலங்கைப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பிரதித் தலைவராகவும் விளங்கியவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், பேராதனைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் வரலாற்றுத்துறைப் பேராசிரியராகப் பணியாற்றிய இவர் இந்து பண்பாட்டுத் திணைக்களத்தினால் வெளியிடப்படும் இந்துக் கலைக்களஞ்சியத்தின் பிரதம பதிப்பாசிரியருமாவார்

ஏனைய பதிவுகள்

Angeschlossen Casinos Abzüglich Oasis

Content German Verbunden Spielsaal Payment Methods | william hill casino promo code 2024 Popular Video Poker Games Betway Casino Unser Vorteile Von Angeschlossen Lotto Gesprächspartner