க.இராசரத்தினம். மிருசுவில்: நெல்லிக்கிணற்றடி தான்தோன்றி கந்தசுவாமி தேவஸ்தான வெளியீடு, மன்னன் குறிச்சி, மிருசுவில் வடக்கு, 1வது பதிப்பு, 2021. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
xxii, 204 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22.5×15.5 சமீ.
மேற்படி ஆலயத்தைப் பற்றி வெளிவரும் முதலாவது நூல் என்ற வகையிலும், இவ்வாலயத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முதலாவது நூல் என்ற வகையிலும் இப்பிரசுரம் முக்கியத்துவம் பெறுகின்றது. வாழ்த்துரைகள், முகவுரைகளைத் தொடர்ந்து நூலின் முதற்பகுதியில் ஆலய வரலாறு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இந்து சமயமும் மன்னன் குறிவச்சி மக்களும், கோவிலின் அமைவிடம், கோவிலின் வரலாறு, மூலஸ்தானக் கடவுள், கோயில் அமைப்பு, நித்திய பூசைகளும் மகோற்சவ விழாக்களும், விசேட விழாக்களும் விரதங்களும், கோயிலின் சிறப்புக்கள், முருகப் பெருமானின் சிறப்புக்கள், சைவசமயச் சிறப்புக்கள் ஆகிய 10 இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. நூலின் பிற்பகுதியில் திருமுறை சைவசித்தாந்தப் பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.