16091 வரலாற்றின் பேசுபொருளாகிய நல்லூரான் செம்மணி வளைவு.

ஜெயேந்திரா ஹபீசன், பரமலிங்கம் மதூசன். யாழ்ப்பாணம்: நல்லூர் சைவத் தமிழ்ப் பண்பாட்டுக் கலைக்கூடல், நல்லூர், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2021. (யாழ்ப்பாணம்: சோலோ பிரின்டர்ஸ், 520A, கஸ்தூரியார் வீதி).

36 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 300., அளவு: 20.5×14.5 சமீ.

நல்லூர் கந்தப் பெருமானின் சிறப்பை உணர்த்தும் வகையில் செம்மணியில் உருவாக்கப்பட்ட வரவேற்பு வாயில் மிகப் பெறுமதியானது. இவ்வரலாற்றுப் பணியை ஆவணப்படுத்தும் நோக்கில் இந்நூல் 29.08.2021 அன்று நல்லைக் கந்தன் பெருந் திருவிழாவின்போது வெளியிடப்பட்டது. இவ்வாயிற் கட்டடம் கந்தபுராணக் கலாசாரத்தைப் பிரதிபலித்து நல்லூர் கந்த சுவாமியாரின் அருட்கடாட்சத்தை வெளிப்படுத்தி பக்தர்களை ஆற்றுப்படுத்தி அமையப்பெற்றுள்ளது. சிறப்பாகக் கொடுங்கை அமைப்புடன் கூடிய நுழைவாயில் அமைக்கப்பட்டு நடுவில் இரண்டு தளங்களைக் கொண்ட இராஜகோபுரம் ஒன்று பண்டிகையில் ஐந்து கலசங்களைக் கொண்ட அமைப்புடன் நிறுவப்பட்டுள்ளது. இவ்வளைவு தொடர்பான விளக்கங்கள் அனைத்தும் வண்ணப் புகைப்பட உதவியுடன் விரிவாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வளைவு 25.05.2021 வைகாசி விசாகத்தன்று நல்லூர் பிரதேச செயலகத்தினால் நல்லூர் சைவத் தமிழ்ப் பண்பாட்டுக் கலைக்கூடலிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.                      

ஏனைய பதிவுகள்

Pay By Mobile Casino Uk

Content Tip 7: Shop Around To Find The Top Casino Online Get Up To 500 Free Spins Playzee We hope that this casinolead.ca why not