16096 நல்லைக்குமரன் மலர் 1994.

தெல்லியூர் செ.நடராசா (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சைவசமய விவகாரக்குழு, யாழ்ப்பாண மாநகராட்சி மன்றம், 1வது பதிப்பு, 1994. (யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம், 430, காங்கேசன்துறை வீதி).

140 + (14) பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25.5×18.5 சமீ.

நல்லூர் கந்தசுவாமி கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு வருடாந்தம் வெளியிடப்படும் இம்மலரின் இரண்டாவது இதழ் இது. 1994ஆம் ஆண்டு நல்லூர்த் திருவிழாவின்போது இச்சிறப்பிதழ் வெளிவந்துள்ளது. ஆசிச்செய்திகள், வாழ்த்துச் செய்திகள் ஆகியவற்றுடன் எமது நோக்கு, ஓம் ஸ்ரீ மகா கணபதியே போற்றி, ஓம் ஸ்ரீ வித்தகனே போற்றி, துள்ளி வருகுது வேல் (தங்கம்மா அப்பாக்குட்டி), நாவலரும் நல்லூரும் (க.சிவராமலிங்கம்), தந்தைக்குக் குரு (சி.வேலாயுதம்), முருகன் பெருமை (நா.க.சண்முகநாதபிள்ளை), பஞ்சதீர்த்த தருப்பணம், புனித நகரமாக்கப்படவேண்டிய நல்லூர் (பொ.பாலசுந்தரம்பிள்ளை), எல்லாம் அற என்னை இழந்த நலம் (கார்த்திகேசு சிவத்தம்பி), கழல் பணிய வினை நீங்கும் (அ.சண்முகதாஸ்), தீக்கூர்ந்த திருமேனியன் (வி.சிவசாமி), திருவிழாக்களின் நியமங்கள் (ப.கோபாலகிருஷ்ணன்), ‘நல்லூரும் நாவலரும்” சில வரலாற்று நிவைவலைகள் (சி.க.சிற்றம்பலம்), திருமந்திரம் காட்டும் மனித நேயம் (கலைவாணி இராமநாதன்), ஆறுமுக தத்துவம் (நாச்சியார் செல்வநாயகம்), எழிலான் ஒளி வேலான் (சொக்கன்), ஆணவம் போக்கி அருளுவோர் அவதாரம் (காரை செ.சுந்தரம்பிள்ளை), ஓடக்காரன் (சோ.பத்மநாதன்), ‘நல்லைக் குருமணி” மணி ஐயர் (பிரம்மஸ்ரீ சிவ.வை.நித்தியானந்த சர்மா), சூரன் பெற்ற பெருமை (த.சிவகுமாரன்), நம்பி கை தொழுவோம் (ஆறு.திருமுருகன்), ஞானவழி நின்ற நல்ல குருநாதன் (நல்லையா விஜயசுந்தரம்), வீசாயோ வேலை நீ (மானிப்பாயூர் வே.த.இரத்தினசிங்கம்), மகா கும்பாபிஷேகம்-சில விளக்கங்கள் (ஆடியபாதன்), திருமுருகன் திருவருள் (சி.சி.வரதராசா), பல்கலை புலவர் க.சி.குலரத்தினம் (யாழ்ப்பாடி), ஏற்றிடுவோம் வாரீர் (வே.த.இரத்தினசிங்கம்) ஆகிய தலைப்புக்களில் எழுதப்பட்ட ஆக்கங்கள் இம்மலரில் அடங்கியுள்ளன.

ஏனைய பதிவுகள்

crypto

Crypto market cap Mgm casino online Crypto The SEC alleged that Kraken’s staking program offered investors returns in exchange for their tokens and that these