நல்லையா விஜயசுந்தரம் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சைவசமய விவகாரக்குழு, யாழ்ப்பாண மாநகராட்சி மன்றம், 1வது பதிப்பு, 2010. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ், 15/2B, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்).
218 + (82) பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25.5×18.5 சமீ.
நல்லூர் கந்தசுவாமி கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு வருடாந்தம் வெளியிடப்படும் மலர். 18ஆவது மலராக 2010ஆம் ஆண்டு நல்லூர்த் திருவிழாவின் போது இச்சிறப்பிதழ் வெளிவந்துள்ளது. ஆசிச்செய்திகளுடன் திருநல்லைத் தெய்வ வடிவேல் (ச.தங்கமாமயிலோன்), நல்லூரடி நீழல் (த.ஜெயசீலன்), ஆறுமுகனும் அறுபடை வீடுகளும் (வ.யோகானந்தசிவம்), எங்கு நாம் போகின்றோம்? (மு.திருநாவுக்கரசு), நல்லைக்கந்தன் நற்றமிழ்ப் பாமாலை (இராசையா ஸ்ரீதரன்), இதயத்தில் ஈரமென்றும் இல்லையோ? (வதிரி கண.எதிர்வீரசிங்கம்), அருவியாகட்டும் உன் அருட்கடாட்சம் (கண.கிருஷ்ணராஜன்), நல்லைக்குமரன் திருப்புகழ் (வ.சின்னப்பா), நல்லைக்குமரன் காவடிச் சிந்து (கு.துரைராஜன்), உயர்கொள்ளும் நல்லையூர் திருவேல் (அல்வாயூர் சி.சிவநேசன்), நல்லைக்குமரன் கீர்த்தனை (செ.பஞ்சநாதன்), நல்லை முருகன் மலரில் ஒரு நொண்டிச் சிந்து (வை.க.சிற்றம்பலம்), சென்று சேவிக்க (பா.அருண்), குகையில் வளருங் கனலே (மனோன்மணி சண்முகதாஸ்), கலியுக வரதன் குருவடிவிலே திருவருள் பாலித்து வருகிறான் (வி.சிவசாமி), அகரவுயிர் போல் (மட்டுவில் ஆ.நடராசா), உதித்தனன் உலகம் உய்ய (கே.எஸ்.ஆனந்தன்), அருணகிரிநாதர் திருப்புகழில் வேண்டுகை (அ.சண்முகதாஸ்), கந்தபுராணம் -ஒரு தோற்றுவாய் (வ.கோவிந்தபிள்ளை), யாழ்ப்பாணத்து முருகப் பிரபந்த இலக்கியங்கள் (கனகசபாபதி நாகேஸ்வரன்), திருவாசகத்தில் இலக்கிய வடிவங்கள் (செல்வரஞ்சிதம் சிவசுப்பிரமணியம்), தாயுமானவர் காட்டும் சமயநெறி (சிவ.மகாலிங்கம்), தமிழர் வாழ்வில் விருந்தோம்பல் (விக்னேஸ்வரி பவநேசன்), திருக்குறளில் அறிவியல் சிந்தனை (அம்பாலிகா தம்பாபிள்ளை), பக்தி இலக்கியங்களில் தூது (எஸ்.ஜெகநாதன்), இந்து சமயம் ஒரு கலைக்களஞ்சியம் (பா.பிரசாந்தனன்), தமிழ்மறையும் திருமுறையும் (செ.மதுசூதனன்), ஆலய வழிபாடு-கேள்வியும் விளக்கங்களும் (ஜி.பற்குணராஜா), ஊழிக் கனலும் அணுகாது (செல்வ அம்பிகை நடராஜா), ஊன் படைத்த உத்தமர் (பொ.சிவப்பிரகாசம்), குரு வடிவாம் தென்முகக் கடவுள் தெட்சணாமூர்த்தி (வை.சி.சிவசுப்பிரமணியம்), வண்ணார்பண்ணை பெயர் விளக்கம் (பரராஜசிங்கம் கணேசலிங்கம்), பிடியரிசியினால் உயர்ந்த அறப்பணிகள் (மூ.சிவலிங்கம்), உளப்பாதிப்பிலிருந்து விடுதலை பெற ஆலய தரிசனம் உதவுகிறது (க.ஸ்ரீதரன், ஸ்ரீ.அன்புச்செல்வி), ஈழத்து இந்து சமயத்தின் வளர்ச்சிக்கு நாகர் இனம் வழங்கிய பங்களிப்புகள் (செல்லையா கிருஷ்ணராசா), சைவ ஆலயங்களில் மௌன விரதத்தை அனுட்டிப்போம் (கா.சிவபாலன்), கடமைகளைச் செவ்வனே நிறைவேற்றுவதன் மூலம் இறையின்பம் பெறுவோம் (கா.யோகநாதன்), கிரகதோஷ பரிகாரம் (தி.பொன்னம்பலவாணர்), நல்லூர் செல்லப்ப சுவாமிகள் (ம.சிவயோகசுந்தரம்), தமிழ் வாழ தமிழ் இனம் வாழ (கணபதி மகேசன்), நல்லூரைப் புனித நகராக்குவோம் (ஜெ.தயாபரன்), இந்து சமயம் கண்ட விஞ்ஞானம் (செ.பரமநாதன்), முதியோர் பார்வையில் வாழ்க்கை பற்றிய நோக்கு (க.சிவலிங்கம்), தேகாந்த நிலையில் சிவத்தமிழ் அன்னைக்கு யாழ் விருது (இ.இரத்தினசிங்கம்) ஆகிய படைப்பாக்கங்கள் இம்மலரில் இடம்பெற்றுள்ளன.