16102 நல்லைக்குமரன் மலர் 2012.

நல்லையா விஜயசுந்தரம் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சைவசமய விவகாரக்குழு, யாழ்ப்பாண மாநகராட்சி மன்றம், 1வது பதிப்பு, 2012. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ், 15/2B, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்).

148 + (80) பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25.5×18.5 சமீ.

நல்லூர் கந்தசுவாமி கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு வருடாந்தம் வெளியிடப்படும் மலரின் 20ஆவது இதழ் இதுவாகும். 2012ஆம் ஆண்டு நல்லூர்த் திருவிழாவின்போது இச்சிறப்பிதழ் வெளிவந்துள்ளது. ஆசிச்செய்திகள், வாழ்த்துச் செய்திகள் ஆகியவற்றுடன் பாமாலைகளாக நல்லைநகர்ச் சண்முகரை நாம் பணிவோம் நாளுமே (ச.தங்கமாமயிலோன்), ஆறு தன்மைகள் கொண்ட ஆறுமுகன் (வ.யோகானந்தசிவம்), என்னைச் சுகப்படுத்து (த.ஜெயசீலன்), வேழமுகன் தம்பியே வேல்முருகா (வதிரி கண. எதிர்வீரசிங்கம்), அடியருளத் தாமரையிற் குடிகொண்ட ஆதி நல்லூரில் கந்தா (பொன். பாக்கியம்), நல்லைக்குமரா நிதமருள் தருவாய் (கே.ஆர்.திருத்துவராஜா), சுந்தரனே நல்லூரின் நாயகனே (கண. கிருஷ்ணராஜா), முருகனை துதி மனமே (சி.சிவநேசன்), நல்லூரில் வளர் சேவற் கொடியானே (பாமாலை) (இராசையா ஸ்ரீதரன்), முருகன் திருவருளே முதல் (க.அருமைநாயகம்), நல்லைக்குமரா (மீசாலையூர் கமலா), ஓடி வந்து எமைக்காத்து அருள்புரிவாய் (சந்திரவதனி தவராசா), ஆகிய கவிமாலைகளும், பன்னிருகையன் (மனோன்மணி சண்முகதாஸ்), குருவாய் வருவாய் அருள்வாய் குகனே (வி.சிவசாமி), நல்லைக் கந்தனும் ஞானச் செல்வரும் (சிவ. மகாலிங்கம்), மாமனும் மருமகனும் (அ.சண்முகதாஸ்), அகங்காரம் அழிக்கும் ஓங்காரப் பிரணவம் (நா.சிவசங்கரசர்மா), முருகனும் தமிழும் (புஸ்பா செல்வநாயகம்), ஐங்கரனேர் நல்லூரே (யோகேஸ்வரி சிவப்பிரகாசம்), பரிபாடலும் முருக வழிபாடும் (வை.நவதரன்), கந்தபுராணம்: ஒரு நீதிநூற் கருவூலம்-3 (வ.கோவிந்தபிள்ளை), மகோற்சவ விசேட தினங்கள்- 2012, கன்மக் கொள்கையும் அறநெறிக் கொள்கையும்: சைவசித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டது (கலைவாணி இராமநாதன்), சூரியபகவான் பிரதிஷ்டை, ஆலயங்களிலே சிவாகம மரபில் நடைபெறும் உற்;சவங்களின் வரிசையில் பவித்ரோற்சவம் பெறும் முக்கியத்துவம்: ஓர் சிறப்புப் பார்வை (பாலகைலாசநாதசர்மா மகேஸ்வரக் குருக்கள்), மகோற்சவ விளக்கம் (தி.பொன்னம்பலவாணர்), கடம்பமாலை (க.சி.சதாசிவம்), நவவீரர்கள் தோற்றமும் தத்துவமும் (கிருஷ்ணானந்த சர்மா ஸ்ரீபதி சர்மா), நலன்பல நல்கும் நயமிகு திருப்புகழ் (வை.சி.சிவசுப்பிரமணியம்), முருகப் பெருமானிடம் அட்டமா சித்திகளையும் பெற்ற அருணகிரிநாதர் (மு.சிவலிங்கம்), தேரேறி வருகின்றான் திருமுருகன் (கி.குலசேகரன்), பெரியாழ்வாரும் பகழிக்கூத்தரும் (செல்வஅம்பிகை நந்தகுமாரன்), எல்லையில்லாதருள் தருவாய் (ஸ்ரீ திவ்வியன்), தம்பிரான் தோழர் (பொ.சிவப்பிரகாசம்), திருக்குறள் காட்டும் அரச தர்மம் (சாந்தகுமார்), உயிர் நீப்பர் மானம் வரின் (ஆ.வடிவேலு), நல்லைக் குமரா நற்கதி நல்குவாய் (சி.தயாபரன்), சுவாமி விவேகானந்தரின் வாழ்வும் வழிகாட்டலும் (க.சிவலிங்கம்), பண்டைத் தமிழரின் வானியல் அறிவு (விக்னேஸ்வரி பவநேசன்), சைவசமய விவகாரக் குழுவின் முன்னாள் தலைவர்கள், இந்து விஞ்ஞானம் (அஜித் யோகேஸ்வரன்), விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானத்தின் பாற்பட்டதே (ச.ரூபசிங்கம்), கந்தா (வசுகி சதாசிவம்), நல்லூருக்கு ஒரு பாத யாத்திரை: சில சிந்தனைகள் (வை.இரகுநாத முதலியார்), சமய சீர்திருத்தங்கள் (செ.பரமநாதன்), நல்லூர் ஷண்முகர் வாசல் இராஜகோபுரம், சைவாலயங்கள் தோறும் திருநந்தவனம் அமைத்தல் (கா.சிவபாலன்), விருட்சமாக வளர்ந்துவரும் சைவசமய விவகாரக்குழு (பு.ஆறுமுகதாசன்), 2012இல் யாழ் விருதினைப் பெறும் அமுதசுரபி அன்னதானசபை (பு.ஆறுமுகதாசன்) ஆகிய ஆக்கங்களும் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Starburst On line Slot Remark

Content What are the Tricks and tips Because of it Position? Play A real income Gambling games At the Sky Vegas Having A no Deposit