16103 நல்லைக்குமரன் மலர் 2013.

நல்லையா விஜயசுந்தரம் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சைவசமய விவகாரக்குழு, யாழ்ப்பாண மாநகராட்சி மன்றம், 1வது பதிப்பு, 2013. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ், 15/2B, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்).

x,188+(62) பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25.5×18.5 சமீ.

நல்லூர் கந்தசுவாமி கோயில் தேர்த் திருவிழாவை முன்னிட்டு வருடாந்தம் வெளியிடப்படும் மலரின் 21ஆவது இதழ் இதுவாகும். 2013ஆம் ஆண்டு நல்லூர்த் திருவிழாவின்போது இச்சிறப்பிதழ் வெளிவந்துள்ளது. ஆசிச்செய்திகள், வாழ்த்துச் செய்திகள் ஆகியவற்றுடன் நல்லைக் கந்தனவன் சேவடியைச் சேவிப்போம் (ச.தங்கமாமயிலோன்), ஒரு திரு முருகன் வந்து உதித்தனன் உலகம் உய்ய (வ.யோகானந்தசிவம்), நீயே பார்த்துக்கொள் (த.ஜெயசீலன்), பங்க மறுத்திட பறந்தோடிவா முருகா (அன்னைதாசன் ஆனந்தராசா), நல்லைத் திருமுருகா (க.அருமைநாயகம்), நல்லைக் கந்தனுக்க ஒரு நற்றமிழ்ப் பாமாலை (இராசையா ஸ்ரீதரன்), ஒளவையின் தமிழ்மேவ அருள்பவனே (வதிரி கண.எதிர்வீரசிங்கம்), சிந்தையில் சிறை வைத்தேன் கந்தனை (சி.சிவநேசன்), நல்லூர்க் கந்தன் அனுபூதி (தவபாலகோபால்), முருகப் பெருமான் திருக்கரத்தால் தாங்கி எம்மைக் காப்பாராக (வி.சிவசாமி), சித்தர் மரபில் முருக வழிபாடும் வள்ளலாரின் அணுகுமுறையும் (கலைவாணி இராமநாதன்), சங்க இலக்கியங்களில் முருக வழிபாடு ஓர் ஆய்வு (பொ.பூலோகநாதன்), முருக வழிபாட்டின் தோற்றமும் வளர்ச்சியும் (தயாளினி செந்தில்நாதன்), சுப்பிரமண்ய பரார்த்த பூஜை விதிமுறைகள்: ஒரு நோக்கு (மகேஸ்வரக் குருக்கள் பாலகைலாசநாத சர்மா), முருகன் வள்ளி தேவசேனாதிபதி (து.ஷ.இரத்தினசபாபதிக் குருக்கள்), ஈழநல்லூர் திருப்பதியின் சிறப்பு (மு.சிவலிங்கம்), நல்லூரான் போதிக்கும் நல்லவை (வை.தவதரன்), நல்லூர்க் கந்தசுவாமி கோவில் மகிமை (வா.பரமேஸ்வரன்), திருஞானசம்பந்தர் அருளால் கிடைக்கப்பெற்ற ‘கற்றவர் விளங்கும் கற்பகக் கனி” (கே.எஸ்.ஆனந்தன்), திருவாசகத்தில் மலர்கள் (மனோன்மணி சண்முகதாஸ்), அருளானந்தத்தின் பால் ஆன்ம ஈடேற்றந் தரும் சிவபுராணம் (ஸ்ரீபத்மராசா திவ்வியன்), திருமந்திரத்தில் அறம் (சிவமகாலிங்கம்), கண்ணப்பநாயனாரின் ஈடு இணையில்லாத பக்தி (வை.சி.சிவசுப்பிரமணியம்), திருமுருகன் அருள்பெற்ற செல்வர்கள் (சிவ.வை.நித்தியானந்த சர்மா), இந்து அறவியல் எனும் பதம் பற்றிய விளக்கமும் மானவதர்மசாஸ்திரம் கூறும் அறக் கருத்துகளும் ஒரு நோக்கு (கர்ணிகா பாஸ்கர ஐயர்), ஆலய கிரியைகளிற் சிறப்பிடம் பெறும் பூதசுத்தி (நா.சிவசங்கர சர்மா), இந்து வாழ்வியலில் திருமணச் சடங்கு (ஜீ.பற்குணராஜா), சைவ சமயத்தில் அன்பு தொடர்பான கருத்துக்கள் (க.கணேசதேவா), சமய உணர்வு (தி.செல்வமனோகரன்), ஆரோக்கியத்தில் ஆன்மீகம் (அருள்மொழி சுதர்மன்), ஜோதிலிங்க சிவஸ்தல மகிமை (அருந்ததி சிவசுப்பிரமணியம்), மாநகர் மதுரை (பொ.சிவப்பிரகாசம்), வாழ்வை நெறிப்படுத்தும் சமயம் (ப.நடராஜா), சைவாலயப் பெருவிழாக்கள் (தி.பொன்னம்பலவாணர்), என்னை எனக்குள் தேடினேன் அங்கு உன்னையே காண்கிறேன் இறைவா (மலர் சின்னையா), சும்மா இரு சொல்லற (செ.பரமநாதன்), நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன பெருமிதம் கொள்கிறேன் (பி.என். சுதர்ஷன்), 2013இல் யாழ் விருது பெறும் அருட்தந்தை மரியசேவியர் அடிகளார் (ப.ஆறுமுகதாசன்) ஆகிய ஆக்கங்களும் இம்மலரில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Sloto Crypto Benefits

Articles 100 percent free Revolves on the Dollars Bandits No-deposit Extra All of us Nuts.io Gambling establishment: 20 Free Revolves No deposit Bitcoin Gambling enterprises

12169 – முருகன் பாடல்: மூன்றாம் பகுதி.

தொகுப்பாளர் குழு. கொழும்பு 11: தெட்சணத்தார் வேளாளர் மகமை பரிபாலன சொசைட்டி லிமிட்டெட், 98 ஜிந்துப்பிட்டி தெரு, 1வது பதிப்பு, ஆவணி 1992. (சென்னை 600002: காந்தளகம், 4, முதல்மாடி, 834, அண்ணா சாலை).