16104 நல்லைக்குமரன் மலர் 2014.

நல்லையா விஜயசுந்தரம் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சைவசமய விவகாரக்குழு, யாழ்ப்பாண மாநகராட்சி மன்றம், 1வது பதிப்பு, 2014. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ், 15/2B , முருகேசர் ஒழுங்கை, நல்லூர்).

viii, 184+(68) பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25.5×18.5 சமீ.

நல்லூர் கந்தசுவாமி கோயில் தேர்த் திருவிழாவை முன்னிட்டு வருடாந்தம் வெளியிடப்படும் மலரின் 22ஆவது இதழ் இதுவாகும். 2014ஆம் ஆண்டு நல்லூர்த் திருவிழாவின்போது இச்சிறப்பிதழ் வெளிவந்துள்ளது. ஆசிச்செய்திகள், வாழ்த்துச் செய்திகள் ஆகியவற்றுடன் நல்லையிற் கந்தன் வெளிப்படில் (ச.தங்கமாமயிலோன்), அகமகிழும் நாள் அண்மித்துவிட்டது (விகடகவி மு.திருநாவுக்கரசு), அம்மையப்பனாய் அருள்வான் அன்பு (த.ஜெயசீலன்), தமிழர் தெய்வம் அழகன் குமரன் (வ.யோகானந்தசிவம்), முருகன் புகழ் மாலை (சிவஸ்ரீ சா.சோமதேவக் குருக்கள்), நல்லைக்குமரன் வெண்பா மாலை (வ.சின்னப்பா), நல்லைக் கந்தன் நனிவெண்பா (நவ.பாலகோபால்), அழகுநிறை ஆலயமோ நல்லூரினிலே (வதிரி கண.எதிர்வீரசிங்கம்), நல்லைக்குமரன் பாமாலை (நயினை க.ச.அரவிந்தன்), நன்நிலை அருளாயோ? (சி.சிவநேசன்), என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே (மனோன்மணி சண்முகதாஸ்), எல்லோரும் முருகப் பெருமானை வழிபட்டு திருவருள் பெறுவோமாக (வி.சிவசாமி), ஓங்காரத்து உள்ஒளிக்கும் உள் ஒளியாய் விளங்கும் முருகன் (வை.சி.சிவசுப்பிரமணியம்), தேடிக் கண்டுகொண்டேன் (நமசிவாயம் கல்யாணி), கந்தன் கருணை (மு.தம்பிப்பிள்ளை), சங்ககாலத்தில் முருக வழிபாடு (செ.பரமநாதன்), சுப்பிரமணிய புஜங்கம் (பி.என்.சுதர்சன்), கௌமார வழிபாட்டு மரபில் சக்த்யஸ்த்ரஸ்தாபனம் (மகேஸ்வரக் குருக்கள் பாலகைலாசநாத சர்மா), வேத இலக்கியங்களில் சுற்றுச் சூழல் பாதுகாப்பு ஓர் அவதானம் (ஸ்ரீகலா ஜெகநாதன்), சைவ சமயப் பண்பாட்டில் வேதமும் வேள்வியும் (வ.கோவிந்தபிள்ளை), திருவாசகத்தில் சைவசித்தாந்தம் (சிவமகாலிங்கம்), திருவாசகத்தின் இருதயம் (நயினை ஆ.தியாகராசா), திருமந்திரம் ஒரு மெய்யியல் பார்வை (த.தவனீசன்), அருணகிரிநாதரின் திருப்புகழில் விஷ்ணுவின் தசாவதாரங்கள் (புவிலோகசிங்கம் அருள்நேசன்), திருமுறைப் பாடல்கள் அணிசெய்யும் சிவநெறி (மு.சிவலிங்கம்), கம்பரின் கும்பகர்ணனும் கச்சியப்பரின் சிங்கமுகாசுரனும் (கு.பாலஷண்முகன்), நல்லூரானைச் சிறப்பித்த நல்ல குருநாதர்கள் (சண்முகயோகினி ரவீந்திரன்), ஈழத்து சைவ சித்தாந்த வரலாற்றில் சுவாமி ஞானப்பிரகாசரது பணிகள் (க.கணேசதேவா), ஈழநாட்டின் சித்தர் மரபு (ப.பத்மநிருபன்), சர்வதேச உலகில் மதம் (ஜெகநாதன் தற்பரன்), இந்து சமயம்-கல்வி-சமூகவியல் சில சிந்தனைகள் (மா.சின்னத்தம்பி), கடவுள் என்பது யார்? (அ.நளினாசினி), திருக்கேதீச்சரம் (பொ.சிவப்பிரகாசம்), நல்லூர் சட்டநாத ஈஸ்வரர் கோயில் (வசந்தா நடராசன்), முருக வழிபாடுகளும் திருத்தலங்களும் (கீர்த்தனா ஆறுமுகதாசன்), சைவசமயமும் நடைமுறை வாழ்க்கையும் (சு.தேவமனோகரன்), மனமது வசப்பட (அருள்மொழி சுதர்மன்), ஆலய தரிசனமும் ஆரோக்கிய வாழ்வும் (எஸ்.நடராஜா), சைவநெறி போதிக்கும் அன்போடு இயைந்த வாழ்வியல் (சுரேகா பரமானந்தம்), ஆடினார் ஆனந்த நடனம் (சி.கிருஷ்ணமூர்த்தி), அறுகும் வன்னியும் (க.ஜெயராமக் குருக்கள்), 2014இல் யாழ் விருது பெறும் வித்தியாசாகரம் சிவஸ்ரீ சபா வாசுதேவக் குருக்கள் (பு.ஆறுமுகதாசன்), கர்மயோகி சுவாமி சித்ரூபானந்தா (நா.வி.மு.நவரெத்தினம்) ஆகிய ஆக்கங்கள் இம்மலரில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Slot Machines Gratuit

Content Aflați Cân Funcționează Diferitele Sloturi Cele Apăsător Bune Jocuri Ş Cazino Pentru Români Care Sunt Condițiile Ş Rulare Pe Cazul Rotirilor Gratuite Dar Depunere

11405 தமிழ் ஏழாந்தரம்.

கல்வி வெளியீட்டுத் திணைக்களம். கொழும்பு 10: தமிழ் மொழிக் குழு, பாடவிதான அபிவிருத்தி நிலையம், கல்வி வெளியீட்டுத்திணைக்களம், 1வது பதிப்பு, 1973. (கொழும்பு: இலங்கை அரசாங்க அழுத்தகர் திணைக்களம்). (6), 286 பக்கம், விலை: