நல்லையா விஜயசுந்தரம் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சைவசமய விவகாரக்குழு, யாழ்ப்பாண மாநகராட்சி மன்றம், 1வது பதிப்பு, 2019. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ், 15/2B, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்).
(26), 154 + (64) பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25.5×18.5 சமீ.
இது நல்லூர் கந்தசுவாமி கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு வருடாந்தம் வெளியிடப்படும் மலர். 27ஆவது மலராக 2019ஆம் ஆண்டு நல்லூர்த் திருவிழாவின் போது இச்சிறப்பிதழ் வெளிவந்துள்ளது. ஆசிச்செய்திகளுடன் நல்லூர் முருகா எம்குறை தீராயோ (சின்னப்பு தனபாலசிங்கம்), வரமெலாம் தரவே வலம் வருக (சுபாஷினி பிரணவன்), உன்னருகில் இருப்பேனே (வதிரி கண.எதிர்வீரசிங்கம்), நல்லையூரானே போற்றி போற்றி (தங்கராசா தமயந்தி), தமிழ் வடிவாய் வந்த தமிழ்த் தலைவா போற்றி (தமிழானந்த பாரதி), நல்லூர்க் குமரனின் அருளாட்சி பாமாலை (இ.சரவணபவன்), தெய்வீக மணம் எங்கும் கழழுது (கீழ்க்கரவை கி.குலசேகரன்), சந்தக் கவியில் நல்லைக் குமரன் (நவ.பாலகோபால்), துன்பத்திலிருந்து மீட்க மயிலேறி வா (சின்னையா சிவபாலன்), முருகனிடம் பொது நலவேண்டுகையும் தன்னல வேண்டுகையும் (அ.சண்முகதாஸ்), வழிபாடு ஒரு வாழ்வியல் (மனோன்மணி சண்முகதாஸ்), சோழர் காலத்தில் சமஸ்கிருத நூல்களில் சைவசித்தாந்தம் (கலைவாணி இராமநாதன்), சிவாகமங்கள் காட்டும் தீட்சை முறைகளும் வகைகளும்-குறிப்புக்கள் (ம.பாலகைலாசநாத சர்மா), சிவாகம மரபில் சுப்ரம்மண்யரது படைக்கலம் வேல்-ஓர் ஆய்வு (ச.பத்மநாபன்), நல்லைக் கந்தனின் வேல்வடிவம் (வைத்தியலிங்கம் பாலகிருஷ்ணன்), நக்கீரர் அருளிய திருமுருகாற்றுப்படை (வை.சி.சிவசுப்பிரமணியம்), திருமுறைகளால் மீண்டும் துலங்கியது சைவம் (செ.மதுசூதனன்), சைவமும் வாழ்வும் (தேவராசா விஜிதா), யாழ்ப்பாணத்து திருக்கோயிற் செல்நெறியில் கோபுரங்கள்: சமகால அவதானிப்புகள் (சி.ரமணராஜா), யாழ்ப்பாணத்து முருகத் திருத்தலங்கள் மீது பாடப்பெற்ற பிள்ளைத் தமிழ்ப் பிரபந்தங்கள் – ஒரு சிறப்புப் பார்வை (சண்முகலிங்கம் சஜீலன்), திருக்கோவையார் (பொ.சிவப்பிரகாசம்), அபிராமி அந்தாதியில் சக்தியின் பெருமை (ஆறுமுகம் சசிநாத்), தேவாரங்களின் அகப்பொருளியல் மரபு (தி.செல்வமனோகரன்), அருணகிரிநாதரும் திருப்புகழும் (செ.பரமநாதன்), இடுக்கண் நீக்கும் மந்திரத் திருப்புகழ் (கீர்த்தனா ஆறுமுகதாசன்), ஆன்மீக நல்வாழ்வும் சித்தர்களும் (தி.சுதர்மன்), குழந்தைவேல் சுவாமிகள் (ஆரணி விஜயகுமார்), பிடி அரிசித் தொண்டினால் பெருங்கோயில் அமைத்த இணுவில் சாத்திரம்மா (மூ.சிவலிங்கம்), புலனடக்கம் (கு.சிவபாலராஜா), ஆன்மாவின் எதிரியை விரட்ட மனதை ஒருநிலைப்படுத்துவோம் (மலர் சின்னையா), மானிட வாழ்க்கையை அர்த்தமுடையதாக்கும் யோகக் கலை உணர்த்தி நிற்கும் வாழ்வியற் கூறுகள் (ஸ்ரீ நதிபரன்), ஆலய வழிபாட்டில் கிடைக்கும் உளவளத்துணை (சுவாமிநாதபிள்ளை தேவமனோகரன்), சைவ பரிபாலன சபை – சைவ நூலகம் (வை.இரகுநாத முதலியார்), ஆயிரம் பேரைக் காத்த திருமுருகாற்றுப்படை (காரை எம்.பி.அருளானந்தம்), 2019இல் யாழ். விருது பெறும் வாழ்நாள் பேராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளை (பு.ஆறுமுகதாசன்) ஆகிய ஆக்கங்களும்; இடம்பெற்றுள்ளன.