16107 நல்லைக்குமரன் மலர் 2020.

மலர்க் குழு. யாழ்ப்பாணம்: சைவசமய விவகாரக்குழு, யாழ்ப்பாண மாநகராட்சி மன்றம், 1வது பதிப்பு, 2020. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ், 15/2B, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்).

xvi (12), 84 + (42) பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25.5×18.5 சமீ.

இது நல்லூர் கந்தசுவாமி கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு வருடாந்தம் வெளியிடப்படும் மலர். 28ஆவது மலராக 2020ஆம் ஆண்டு நல்லூர்த் திருவிழாவின் போது இச்சிறப்பிதழ் வெளிவந்துள்ளது. ஆசிச்செய்திகளுடன் இன்றும் நீ காப்பாய் எழுந்து (இ.த.ஜெயசீலன்), தென்றலிலும் வீசி வரும் நல்லூர் வாசம் (சின்னப்பு தனபாலசிங்கம்), அருள் புரிவாய் (கீழ்க்கரை கி.குலசேகரன்), நல்லையின் தொல்புகழைக் காப்பவனே (சின்னையா சிவபாலன்), வள்ளி அறியாமல் ஓடிவந்தீரோ? (யோகேஸ்வரி சிவப்பிரகாசம்), முருக வழிபாட்டில் விரதங்கள் (கீர்த்தனா ஆறுமுகதாசன்), குமார தந்த்ரம்-ஒரு பார்வை (தி.மனோக்ஷன்), ஈழத்துச் சித்தர்கள் வரிசையில் கைதடி (இணுவில்) சச்சிதானந்த சுவாமிகள் சச்சிதானந்த ஆச்சிரமம், கைதடி (மூ.சிவலிங்கம்), இந்து ஆலயங்களும் வழிபாடும் ஒரு சமூக நோக்கு (கணபதிப்பிள்ளை ஈஸ்வரன்), இந்துக்களின் ஒழுக்கவியல் (ஆரணி விஜயகுமார்), சமய சமூக ஒருமைப்பாடு: திருமந்திரத்தினூடான ஒரு வாசிப்பு (தி.செல்வமனோகரன்), முருகும் முருகனும் (இரத்தினம் நித்தியானந்தன்), ‘மிண்டிய மாயாவாதம் என்னும் சண்டமாருதம்” என்ற மணிவாசகரின் திருவாசக அடியினை முன்னிறுத்திய உரையாடல் (எஸ்.முகுந்தன்), சிலப்பதிகாரத்தில் சிகிவாகனன் (த.அபிநாத்), நால்வகை வாழ்க்கை நிலை -ஆச்சிரம தர்மம் (சுவாமிநாதபிள்ளை தேவமனோகரன்), இந்து மதத்தின் மகிமையை உலகிற்கு உணர்த்தி நிற்கும் யோகக் கலையின் சிறப்புகள் (ஸ்ரீ நதிபரன்), சமயங்களே சட்டங்களின் விளைநிலங்கள் (பா.பிரசாந்தனன்), உணவு உட்கொள்ளும் முறை-சித்த மருத்துவம் (தி.சுதர்மன்), தவத்திரு நல்லூர் சடையம்மா சுவாமிகள், 2020இல் யாழ் விருதினைப் பெறும் கவிஞர் சோமசுந்தரம்பிள்ளை பத்மநாதன் அவர்கள் (பு.ஆறுமுகதாசன்) ஆகிய ஆக்கங்களும்; இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Octavian Investe In E

Content Politicăce Planuri Are Primarul Dintr Costinești, Jeanu Dumitru, Conj Următorul Abilitate! Octavian Patrascu Octavian The Militia Captain Octavian The Militia Captain Attack Mechanics Phonemic

Erreichbar Kasino über Handyrechnung bezahlen

Content Vorteile das Zahlung via Handyrechnung Sic nützlichkeit Sie die Alternativen zum Spielsaal durch Handyrechnung saldieren Verbunden Spielbank über Handyrechnung retournieren – Ostmark Im Online