16109 அரியாலை ஸ்ரீ ஞானவைரவர் தேவஸ்தானம்: திருக்கோபுர மஹா கும்பாபிஷேக சிறப்பு மலர்-10.09.2021.

மலர்க் குழு. யாழ்ப்பாணம்: அரியாலை ஸ்ரீ ஞானவைரவர் கோவில் பரிபாலன சபை, 99/1, ஆனந்தன் வடலி வீதி, அரியாலை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2021. (யாழ்ப்பாணம்: அன்றா பிறிண்டேர்ஸ், இல. 356A, கஸ்தூரியார் வீதி). 

128 பக்கம், புகைப்படத் தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×17 சமீ.

அரியாலை ஸ்ரீ ஞானவைரவர் கோவிலில் நிர்மாணிக்கப்பட்ட மூன்று தள திருக்கோபுரத்தின் மகா கும்பாபிஷேகம் 10.09.2021 அன்று நடைபெற்ற வேளையில் வெளியிடப்பெற்ற சிறப்பு மலர் இதுவாகும். வாழ்த்துரைகளுடன் கோவிலின் வரலாறும், வளர்ச்சியும் பற்றிய கட்டுரைகளும், வைரவர் வழிபாடு பற்றிய விளக்கங்களும், திருக்குறளில் ஒழுக்கவியல் (தி.செல்வமனோகரன்), ஈழத்தில் வைரவர் வழிபாட்டின் தொன்மையும் அதன் முக்கியத்துவமும் (விஜயரத்தினம் கனகராசா), வைரவர் துதிகள் (புவனராணி இரகுநாதன்), திருக்கோபுர தரிசனம் (தர்மலிங்கம் பிரதீபன்), கும்பாபிஷேகம் பற்றிய சிறு விளக்கம் (துரைச்சாமி சரத்சந்திரன்), துன்பங்களையும் துயரங்களையும் துரத்தியடிக்கும் ஸ்ரீ ஞானவைரவர் வழிபாடு (இராமுப்பிள்ளை கமலவேணி), சைவசமய வழிபாடு (தில்லைநாயகி பரமநாதன்), அரியாலை ஸ்ரீ ஞானவைரவர் பெருமான் (உதயகலா சந்திமோகன்), இந்துமத வழிபாட்டில் காணப்படும் மருத்துவ குணங்கள் (ஜெயந்தி சீவரத்தினம்), ஞானவைரவா எமை நாடி வருவாய் (கவிதை-டர்சிகா சிவம்), எமது மூதாதையர் போற்றி வளர்த்த வைரவப் பெருமான் (குணரத்தினம் கஜேந்திரா), இந்து சமயத்தவர் தெரிந்துகொள்ள வேண்டிய விடயங்கள் (விமலராணி சிவம்), சைவ சமயமும் சிவசின்னங்களும் (குணரத்தினம் பிரதீபன்), ஆலய வழிபாடும் அனுட்டானங்களும் (தர்மலிங்கம் நவரூபன்), இராஜகோபுரம் (பஞ்சாட்சரம் கணேசமூர்த்தி), அபிஷேகத்தின் மகிமை (துளசிகா தனபாலசிங்கம்) ஆகிய படைப்பாக்கங்களும் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Ainsworth Slots

Content The brand new Legality Out of To experience 100 percent free Harbors Inside the Canada Ideas on how to Enjoy Twice Diamond Online slots