16110 அன்புநெறி சிறப்பு இதழ் : சற்குரு சிவாய சுப்பிரமுனியசுவாமி நினைவு மலர்.

வ.விசுவலிங்கம், தி.விசுவலிங்கம். கனடா: சைவ சித்தாந்த மன்றம், 1008-50 Elm Drive East, Mississauga, Ontario, L5A 3X2, 1வது பதிப்பு, நவம்பர் 2002. (கனடா: பாரதி பதிப்பகம்).

52 பக்கம், புகைப்படத் தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21  சமீ.

கனடா சைவ சித்தாந்த மன்றத்தின் வெளியீடான ‘அன்பு நெறி” சஞ்சிகையின் நவம்பர் 2002 இற்குரிய இதழ் சற்குரு சிவாய சுப்பிரமுனிய சுவாமி நினைவு மலராக வெளிவந்துள்ளது. இவ்விதழில் முன்னுரை, பன்னிரு திருமுறை, நற்சிந்தனைப் பாடல்கள், குருதேவர் சிவாய சுப்பிரமுனிய சுவாமிகள் அஷ்டோத்ர சதநாமாவளி, ஓம் குருநாத தேவர் ஆகிய ஆக்கங்களுடன் சிறப்புக் கட்டுரைகளாக சற்குரு சிவாய சுப்பிரமுனிய சுவாமி மகாசமாதி அடைந்தார், யாழ்ப்பாணம் தந்த அமெரிக்க ஞானி, குருதேவா, குருதேவரின் சிவபதப்பேறு, வேதாகமங்களைப் போதித்து அவற்றின் பிரகாரம் வாழ்ந்து மரணத்திலும் சாதனை புரிந்தவர், ஐரோப்பிய இந்து மறுமலர்ச்சி விஜயம் குருதேவரின் அருளுரை, குருதேவர் சிவாய சுப்பிரமுனிய சுவாமிகள், சன்மார்க்க இறைவன் கோவில், வையம் மறவாது, தியானவழி, ஸ்ரீ சிவாய சுப்பிரமுனிய சுவாமிகளின் நீங்காத நினைவுகள், குருதேவர் சிறீ சுப்பிரமுனிய சுவாமிகள், சன்மார்க்க இறைவன் கோவில், அமெரிக்க சுவாமி சற்குரு சிவாய சுப்பிரமுனிய சுவாமி அவர்களின் வாழ்க்கை வரலாறு, Help Manifest Iraivan Temple ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்