இரா. கேதீசன், ஜெ.கிரிலோஜன், சு.இந்திரை (மலர்க் குழுவினர்). காங்கேசன்துறை: பரிபாலன சபை, அருள்மிகு பெரும்பரப்பு பிள்ளையார் ஆலயம், ஆதி மயிலிட்டி, மயிலிட்டி வடக்கு, 1வது பதிப்பு, மே 2022. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).
vi, (22), 120பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 26.5×18.5 சமீ.
ஆசிச் செய்திகள், வாழ்த்துச் செய்திகள், ஆலய வரலாறு, கட்டுரைகள், ஆலய பரிபாலன விபரம், கணக்கு விபரமும் பொருட்களின் விபரமும் (06.04.2022), மலர்க் குழுவின் உள்ளத்திலிருந்து, பின்னிணைப்பு ஆகிய பிரிவுகளின் கீழ் இம்மலரின் ஆக்கங்கள் வகுக்கப்பட்டுள்ளன. கட்டுரைகள் என்ற பிரிவில், ஆதி மயிலிட்டி அருள்மிகு பெரும்பரப்பு பிள்ளையார் ஆலயம் பற்றிய என் நினைவலைகள், ஆதிமயிலிட்டி அருள்மிகு பெரும்பரப்பு பிள்ளையார் ஆலயம், கும்பாபிஷேக மகிமை, எனது குலதெய்வம், பெரும்பரப்பு விநாயகரும் நானும், பரிவாரமூர்த்தி சண்டேஸ்வரப் பெருமான் பிரதிஷ்டை, எங்கள் குலதெய்வம் பெரும்பரப்பு பிள்ளையார், பிள்ளையாரின் பஞ்சாமிர்தமும் நானும், கோயில் கருவறையும் அதன் இரகசியங்களும், விநாயகப் பெருமானை வழிபட்டு நாம் எல்லோரும் இன்பம் அடைவோம், இந்து சமயிகள் வாழ்வில் அறச் சிந்தனைகள், ஆலயங்களின் அவசியம், ஆதிமயிலிட்டி அருள்மிகு பெரும்பரப்பு பிள்ளையார் ஆலயம், விநாயகர் வழிபாட்டின் முதன்மையும் பழமையும், விநாயகரும் அறுகம்புல்லும், விநாயக வழிபாடும் விநாயக விரதங்களும், ‘மேன்மை கொள் சைவநீதி”, என் பார்வையில் ஆன்மீகம் 2022, அபிஷேக பலன், கண்கண்ட தெய்வம் பெரும்பரப்புப் பிள்ளையார், ஐங்கரன் அடிபணிந்தெழுந்திடுவீர், கண்ணிற் பணிமின் கனிந்து, 21ஆம் நூற்றாண்டில் ஆதிமயிலிட்டி அருள்மிகு பெரும்பரப்பு பிள்ளையார் ஆலயத்தின் தோற்றப் பொலிவு, கோயில்களில் மணி அடிப்பதும் சங்கு ஊதுவதும் ஏன்?, வைரவர் வழிபாடு, யாழ்ப்பாண இந்துசமய செல்நெறியில் இளைஞர்களின் பங்கும் பணியும் ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன.