16112 இந்து ஒளி: நல்லைக் கந்தன் மகோற்சவச் சிறப்பிதழ் 2010.

ஆசிரியர் குழு. கொழும்பு 2: அகில இலங்கை இந்து மாமன்றம், A.C.H.C. கட்டிடம், 91/5, சேர். சிற்றம்பலம் ஏ.கார்டினர் மாவத்தை, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2010. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெட், 48 B, புளுமெண்டால் வீதி).

48 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 30.00, அளவு: 29.5×22 சமீ.

அகில இலங்கை இந்து மாமன்றத்தின் காலாண்டிதழான ‘இந்து ஒளி”யின் 14ஆவது தொகுதியின் 4அவது இதழ் நல்லைக்கந்தன் மகோற்சவ சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. இவ்விதழின் ஆசிரியர் குழுவில் பேராசிரியர் அ.சண்முகதாஸ், கலாநிதி குமாரசாமி சோமசுந்தரம், சிவஸ்ரீ ம.பாலகைலாசநாத சர்மா, திரு கந்தையா நீலகண்டன், திரு. த.மனோகரன் ஆகியோர் பணியாற்றியுள்ளனர். இவ்விதழில் பஞ்ச புராணங்கள், நல்லை ஆதீன முதல்வரின் ஆசிச் செய்தி, நல்லைக் கந்தன் மகோற்சவச் சிறப்பு (கு.சோமசுந்தரம்), கந்தன் அருட்புகழ், நல்லூர் இராசதானியின் வரலாறு (க.நாகேஸ்வரன்), நல்லூரான் திருப்பாதம் பிடிப்போமே, நல்லைக் கந்தா சரணம் சரணம் (தங்கம்மா அப்பாகுட்டி), நல்லருள் புரியும் நல்லைக் கந்தன் (சுப்பிரமணியம் கனகரெத்தினம்), நல்லூர்த் தேரடி, நல்லூரின் பெருமை, நல்லூர்க் கந்தனின் மகோற்சவப் பெருவிழா, அருள்தரும் நல்லூர்ஃநல்லூரான் குறள், தொல்லை வினை தீர்க்கும் நல்லைக் கந்தன் (இராசையா ஸ்ரீதரன்), நல்லை நகர்க் கந்தன் திருவூஞ்சல், சிறுவர் ஒளி-சிந்தனைக் கதைகள், மாணவர் ஒளி-பெரியபுராணக் கதைகள், மங்கையர் ஒளி- மகளிர் திருத்தொண்டில் சந்தனத் தாதியாரின் கடமையுணர்வு (திலகவதி சண்முகசுந்தரம்). தவத்திரு யோகர் சுவாமிகள், சுவாமி விபுலானந்தர், நல்லை திருானசம்பந்தர் ஆதீனம், மாமன்றத்தின் யாழ். பிராந்திய பணிமனை, பதினான்கு ஆண்டுகளை நிறைவுசெய்யும் இந்து ஒளி (அ.கனகசூரியர்) ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்