16113 இலண்டன் சைவ மாநாடு (பதினைந்தாவது) சிறப்புமலர்.

மலர் வெளியீட்டுக் குழு. இலண்டன் N 6 5BA: பிரித்தானிய சைவத் திருக்கோயில்கள் ஒன்றியம், 200A, Archway Road, London 1வது பதிப்பு, ஏப்ரல் 2014. (இலண்டன்: ஜே.ஆர். பிரின்ட், 59-61, Hoe Street, London E17 4QR).

(6), 184 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29.5×21 சமீ.

பிரித்தானிய சைவத் திருக்கோயில்கள் ஒன்றியத்தின் 15வது சைவமாநாடு ‘சைவத்தில் சித்தாந்தம்;” என்ற கருப்பொருளில் 2014 ஏப்ரல் 19-20ம் திகதிகளில் இலண்டனில் இடம்பெற்றது. அதன்போது வெளியிடப்பட்ட இந்தச் சிறப்புமலரில் தலைவருரை, ஆசியுரைகள், வாழ்த்துரைகள் என்பனவற்றுடன், கணக்கும் கடவுளும் (கம்பவாரிதி இ.ஜெயராஜ்), நமது செம்மொழியும் பிறமொழிகளோடு அதன் சிறப்பும் (புதுவை வயி.நாராயணசாமி), சைவ அடியவர்கள் உணர்த்திய வாழும் நெறி (தி.சிவகாமி), இந்தியா சென்று இந்துமதச் சான்றோர் அவையிற் புகழ் நிறுவிய ஈழத்தமிழர் (ஆறு.திருமுருகன்), சைவமும் அறிவியலும் (மூ.தமிழரசி), சிவஞானபோதம் (படித்தறிய வார்த்திகப் பொழிப்பு-பொருள் விளங்க சூர்ணிக் கொத்து (சூ.யோ.பற்றிமாகரன்), சைவத்தின் பெருமையினை நிலைநாட்டிய திருநாவுக்கரசர் (வெ.திருவேணி), சைவம் தமிழுக்கு ஆற்றிய தொண்டு (இரா.சந்திரசேகரன்), சைவத்தில் சமஸ்கிருதம் (பா.வசந்தக் குருக்கள்), சித்த மருத்துவத்தில் சைவ சித்தாந்தக் கோட்பாடுகள் (சே.சிவசண்முகராஜா), சைவ நாற்பாதங்களும் ஓர் ஆன்மீகப் பார்வையும் (பராசக்தி சந்திரசேகரி), இந்து சமய நோக்கில் சித்த மருத்துவம், இராஜயோகம் -ஒரு புதிய கண்ணோட்டம் (பிரேம்குமார் சங்கர்), பௌர்ணமியும் அம்பாள் வழிபாடும் (சண்முகநாத சிவாச்சாரியார்), திருமுறைகளில் அகப்பொருள் மரபு மாற்றங்கள் (மா.சிதம்பரம்), தமிழ்நாட்டிலுள்ள முக்கிய விநாயகர் ஸ்தலங்கள் (ந.நகுலேஸ்வரன்), சிவநெறியும் சிவ வழிபாட்டு மரபுகளும் வளர்ந்து சிறக்கச் சைவ ஆதீனத்திற்கு இணையாகச் செயற்பட்ட யாழ்ப்பாணம் சிவயோக சுவாமிகள், கொடித்தம்ப விளக்கம், சுந்தரர் திருப்பாட்டில் இலக்கியச் செழுமை (வசந்தா வைத்தியநாதன்), தமிழ்க் கல்வியின் சிறப்புக்குச் சைவசித்தாந்த அறிவின் அவசியம் (றீற்றா பற்றிமாகரன்), மாதங்களில் நான் மார்கழி (சபா மகேசன்), சிவஞானபோதம்: பதி, பசு, பாசம் என்னும் முன்பொருளின் உண்மையைக் காட்டும் விதம் (சிவாஜினி ஜெகநாதன்),  Meditation-How to remain still (Sabapathy Sivayogan), Mystery of Numbers in the Verse 2 of Kolaru Pathigam by Saint Thiru Gnana Sampanthar (Mee. Rajagopalan) ஆகிய இந்து சமயக் கட்டுரைகளும்; இடம்பெற்றுள்ளன. இம்மாநாடு, 19.4.2014 அன்று ஹைகேட் ஹில் ஆர்ச்வே முருகன் கோவிலிலும் (Highgate Hill  Murugan Temple, 200A, Archway Road, London N6 5BA) 20.4.2014 அன்று லண்டன் ஸ்ரீ செல்வவிநாயகர் கோவிலிலும் (299-303, Ley Street, Ilford, Essex IG1 4BN) இடம்பெற்றது.

ஏனைய பதிவுகள்

No-deposit added bonus rules

Articles That it casino is bound on your nation. Added bonus Code: 31FREE SlotoCash one hundred Totally free Revolves Free Revolves get so popular as

Casimba

Content Drogennutzer Reviews Of Casimba Spielsaal Das Widerrufung Des Spielers Wird Zurückgehalten Mobiles Casino In Gratorama Prämie Ferner Umsatzbedingungen Hier gibt dies anliegend tollen Bonusangeboten