16114 இலண்டன் சைவ மாநாடு (பதினாறாவது) சிறப்புமலர்.

மலர் வெளியீட்டுக் குழு. இலண்டன் N 6 5BA : பிரித்தானிய சைவத் திருக்கோயில்கள் ஒன்றியம், 200A, Archway Road, London 1வது பதிப்பு, ஏப்ரல் 2015. (இலண்டன்: ஜே.ஆர். பிரின்ட், 59-61, Hoe Street, London E17 4QR).

134 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29.5×20.5 சமீ.

பிரித்தானிய சைவத் திருக்கோயில்கள் ஒன்றியத்தின் 16வது சைவமாநாடு ‘பெரியபுராணமும் சைவ வாழ்வியலும்” என்ற கருப்பொருளில் 2015 ஏப்ரல் 18-19ம் திகதிகளில் இலண்டனில் இடம்பெற்றது. அதன்போது வெளியிடப்பட்ட இந்தச் சிறப்புமலரில் தலைவருரை, ஆசியுரைகள், வாழ்த்துரைகள் என்பனவற்றுடன், பெரியபுராணமும் வாழ்வியலும் (குன்றக்குடி பொன்னம்பல அடிகள்), பெரியபுராணமும் வாழ்வியலும் (மருதாசல அடிகள்), பெரியபுராணத்தில் வைதிக நெறி (பா.வசந்தக் குருக்கள்), பெரியபுராணம் காட்டும் வாழ்க்கை நெறி (இரகு.கமலநாதக் குருக்கள்), பெரியபுராணம் வரலாற்றின் தேவை சைவ வாழ்வு மனிதாய மீட்சியின் தேவை (சூ.யோ.பற்றிமாகரன்), பெரியபுராணத்தில் சைவநீதி (வி.கந்தவனம்), பெரியபுராணத்தில் பக்தி (தி.விசுவலிங்கம்), சைவசமய வாழ்வியலில் பெரியபுராணத்தின் பங்கு (சீனித்தம்பி யோகேஸ்வரன்), பெரியபுராணச் சமுதாய வாழ்க்கை பெரியபுராணத்தால் அறியலாகும் சமுதாயம் (சுந்தரமூர்த்தித் தம்பிரான் சுவாமிகள்), பெரியபுராணமும் சைவ வாழ்வும் (க.கதிர்காமநாதன்), சேக்கிழார் தமிழ் (த.சிவகுமாரன்), பெரியபுராணமும் சைவ சித்தாந்தமும் (மா.வேதநாதன்) ஆகிய பெரியபுராணம் சார்ந்த இந்து சமயக் கட்டுரைகளும்; இடம்பெற்றுள்ளன. இம்மாநாடு, 18.4.2015 அன்று வுட்பிரிட்ஜ் உயர் கல்லூரியிலும் (Woodbridge High School, St Barnabas Road, Woodford Green, IG8 7DQ), 19.4.2015 அன்று லண்டன் அல்பேர்ட்டன் சமூகப் பாடசாலையிலும் (Alperton Community School, Ealing Road, Wembley, Middlesex HA0 4JE) இடம்பெற்றது.

ஏனைய பதிவுகள்

Onlayn-Canli kazino

新しいオンラインカジノPA Echte onlayn kazinolar Best casino online Onlayn-Canli kazino Aproveite e faça seu cadastro na 20bet, um site de apostas esportivas e cassino que oferece

Pop Wikipedia

Content Schauen Sie sich diese Web-Site an: Schritt: Erhalten Diese via AVG Browser bei dem Surfen diese Inspektion Popups dürfen kein Störfaktor coeur Vom acker