16116 இளஞ்சைவ மாணவ மன்றம் : பொன்விழா மலர் 2018.

மலர்க் குழு. மட்டக்களப்பு: இளஞ்சைவ மாணவ மன்றம், சித்தாண்டி, 1வது பதிப்பு, 2018. (மட்டக்களப்பு: துர்க்கா அச்சகம், கொக்குவில்).

xv, 186 பக்கம், ஒளிப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 31.5×22.5 சமீ.

மட்டக்களப்புப் பிரதேசத்தில் சிகண்டி முனிவரால் நிறுவப்பட்டதாகக் கருதப்படுவது சித்தாண்டி சித்திரவேலாயுதர் ஆலயமாகும். 1968இல் இவ்வாலயச் சூழலில் வாழ்ந்திருந்த சிவலிங்கம் ஆசிரியரின் ஆலோசனைப்படி நிறுவப்பட்டதே இளஞ் சைவ மாணவ மன்றமாகும். கூட்டு வழிபாடு, ஆனந்தக் காவடி, கோலாட்டம், கும்மி என்பன இப்பிரதேசத்தில் இவ்விளைஞர்களால் புதுப்பொலிவுடன் பயிலப்பட்டன. சைவத்திருமுறைப் போட்டிகள், வழிபாட்டுக் கலை வடிவங்களுக்கான போட்டி, திருமுறை உலாவுக்கான ஏற்பாடு, புராண படனம், சமயகுரவர் பூசை, சமய தீட்சை, நூல் வெளியீடு, சமயத் தேர்வுகள், உயர்தரத் தேர்வுக்கான சிறப்பு முறைத் தயார்ப் படுத்தல்கள் என இன்னோரன்ன செயற்பாடுகளை கடந்த ஐம்பதாண்டுகளாக இவ்வமைப்பினர் முன்னெடுத்துள்ளனர். இளஞ் சைவ மாணவர் மன்றத்தின் ஐம்பதாண்டுப் பணியின் நினைவுகூரலாக இந்தப் பொன்விழா மலர் 2018இல் வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு பிரமுகர்களின் ஆசிச் செய்திகள், வாழ்த்துரைகளுடன் கூடிய இம்மலரில், சித்தாண்டி ஒரு திருநாம மந்திரம், சிவஞானியர் உகக்கும் சித்தாண்டி, சித்தாண்டித் தலத்து சிவனடியார் சித்திரங்கள், சித்தாண்டி சிறப்புக்கள், கதிரை யாத்திரையின் கேந்திர நிலையம், சித்தாண்டி சித்திரவேலாயுதர் கோவில் வரலாறும் ஐதீகங்களும், பரம்பொருள், இலங்கையில் சைவமும் கிழக்கிலங்கையில் முருக வழிபாடும், இன்றைய இளைஞர்களும் இந்துசமய சமூக நெறிமுறைகளும், சித்தாண்டி திருமணச் சடங்குகள் பற்றிய ஓர் ஆய்வு, சித்தாண்டி கல்வி வரலாறு-ஒரு நோக்கு, சித்தாண்டி ஆலய அனுட்டானம், பிரணவ தீர்த்தம், சித்தாண்டிச் சீர், முருக வழிபாட்டின் பெருமை, சம்பிரதாயங்களும் அறிவியலும், கர்ணபரம்பரைக் கதைகளும் காலச்சுவடுகளும், இறைபணியில் இணைவோம் இறை அன்பைப் பெறுவோம், பொன்விழாப் பொலிவுகாணும் இளம் சைவ மாணவர் மன்றம், மானுட யாத்திரையில் மறக்கமுடியாத பகிர்வுகள், என் பார்வையில் சிவலிங்கம் ஐயா, சித்தாண்டிக் கீர்த்தனைகள், மன்றத் தாபகர் ஆகிய ஆக்கங்களும் இம்மலரைச் சிறப்பிக்கும் வகையில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Emoji Harbors

Content Similar harbors you could such 100 percent free Revolves Wagering Laws Greatest Casinos That provide MrSlotty Games: 100 percent free Spins No deposit Freerounds and you