மலர்க் குழு. தெகிவளை: கொழும்பு-காரை அபிவிருத்தி சபை, 48, அல்பேட் இடம், 1வது பதிப்பு, ஜீலை 1970. (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 201, டாம் வீதி).
(24), 48 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×17 சமீ.
‘காரை ஒளி” சஞ்சிகையின் ஜீலை 1970இற்குரிய (ஒளி 2, சுடர் 5) இதழ், ஈழத்துச் சிதம்பர குடமுழுக்கு விழா மலராக 22.8.1970 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இம்மலரில் ஈழத்துச் சிதம்பரம், வாழ்த்துச் செய்தி (சிவஸ்ரீ க. மங்களேஸ்வரக் குருக்கள்), வாழ்த்துச் செய்தி (ஈழத்துச் சிதம்பர தேவஸ்தான கர்த்தர்கள்), சைவம் காத்த பூமி, ஈழத்துச் சிதம்பரமும் காரை அபிவிருத்திச் சபையும், கும்பாபிஷேகம் (கா.கைலாசநாதக் குருக்கள்), சாதியினும் சமயமே அதிகம் (பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை), ஈழத்துச் சிதம்பரம்- செய்யுள் (பண்டிதர் சங்கர. வைத்தியலிங்கனார்), யான் அறிந்த காரைநகர்ச் சிவன்கோயில் (வே. சிவகுரு), ஈழத்துச் சிதம்பரம் எனப் பெயர் பெறும் காரைநகர்ச் சிவன்கோவில் குடமுழுக்கு விழா (தங்கம்மா அப்பாக்குட்டி), வனப்புறு திருநாள் (புலவர் சொ. சிங்காரவேலன்), மஹா கும்பாபிஷேகம் (எஸ்.சுவாமிநாத சிவாசாரியார்), கண்டறியாதன கண்டனர் (சிற்பி), சிதம்பரநாதன் தோத்திரம் -பாடல் (சீ.வினாசித்தம்பி), காரைநகரில் ஒட்டிப்பிறவா இரட்டையர்கள் (கு. ஓ. ஊ. நடராசா), ஆபத்து வேளையில் அபயமளிக்கும் திண்ணபுரத்தான் (இ.வை.பொன்னம்பலம்), ஈழத்துச் சிதம்பரத்து குடமுழுக்கு விழா (வை.சச்சிதானந்தன்), பெருஞ்சாந்திக்குச் சாந்தியாயமையும் மண்டலாபிஷேகம் (சிவஸ்ரீ கு. பாலசுந்தரக் குருக்கள்), மணி ஓசை நாடகத்திலிருந்து ஒரு பாடல், 365 நாட்களில் ஒரு நாளாவது (ஆ.அரசரத்தினம்), ஈழத்துச் சிதம்பரத்தின் ஆனந்தக் கூத்தன் (சர்மா), திருப்பள்ளியெழுச்சி, திருவெம்பாவை ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன.