மலர்க் குழு. யாழ்ப்பாணம்: நிர்வாகசபை, துர்க்காபுரம் மகளிர் இல்லம், ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம், தெல்லிப்பழை, 1வது பதிப்பு, 2022. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம், காங்கேசன்துறை வீதி).
xv, 84 பக்கம், 46 புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 26.5×18.5 சமீ.
இச்சிறப்பிதழில், துர்க்காபுரம் மகளிர் இல்ல 39ஆவது ஆண்டறிக்கை, ஆன்மீக ஒளிபரப்பி மனித நேயம் போற்றிய அன்னை, இதய அஞ்சலி, சமூக சேவைக்கும் சமூகப் பணிக்குமுள்ள வேறுபாடுகளும், சமூகப்பணியினூடாக சமுதாய விருத்தியை ஏற்படுத்தலும், ஆற்றுப்படுத்தும் ஆற்றுகைகள், நாற்பது ஆண்டுகள் நற்பணி, மாண்புமிகு மகளிர் இல்லம், இல்லத்தின் வளர்ச்சிப்பாதை-ஒரு நோக்கு, இல்லத்தின் வளர்ச்சியில் ஒரு நோக்கு, ஆகிய கட்டுரைகளுடன் இல்லப் பிள்ளைகளின் ஆக்கங்களும் இடம்பெற்றுள்ளன. இம்மலரின் மலர்க்குழுவில் செல்விகள் சுபாசினி துரைசிங்கம், றஜிதா செல்வநாதன், ஹரிசாளினி கருணாகரன், ஐஸ்வர்யா இராஜஇராஜேஸ்வரன், நிருத்திகா ஜீவராசா ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.