16123 நெட்டிலைப்பாயான் எழில் : கோண்டாவில் திருவருள்மிகு நெட்டிலைப்பாய் பிள்ளையார் திருக்கோயில் புனராவர்த்தன மஹாகும்பாபிஷேக மலர்.

செல்லப்பா நடராசா (மலர் ஆசிரியர்). கோண்டாவில்: பரிபாலன சபை, திருவருள்மிகு நெட்டிலைப்பாய் பிள்ளையார் திருக்கோயில்,  1வது பதிப்பு, ஜீன் 2011. (யாழ்ப்பாணம்: அன்றா பிறிண்டேர்ஸ், இல. 356A, கஸ்தூரியார் வீதி, நாவலர் வீதிச் சந்தி). 

xviii, 53 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25.5×18 சமீ.

5.6.2011 அன்று இடம்பெற்ற புனராவர்த்தன கும்பாபிஷேகத்தின்போது வெளியிடப்பட்ட சிறப்பு மலர். 1976ஆம் ஆண்டு நெட்டிலைப்பாய் பிள்ளையார் திருக்கோயிலுக்கு புதிய மகா சபையும் பரிபாலன சபையும் தெரிவுசெய்யப்பட்டன. அதன் பின்னர் 1980, 2006 ஆகிய இரு ஆண்டுகளில் இரண்டு மகா கும்பாபிஷேக மலர்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றைத் தொடர்ந்து மூன்றாவதாக 2011இல் வெளியிடப்படும் கும்பாபிஷேக மலர் இதுவாகும். திருக்கோயிலின் தொன்மைகளையும் பழைமைகளையும் மகிமைகளையும் எடுத்தியம்பும் மலர்கள் இவை. ஆசியுரை, வாழ்த்துரைகளுடன், நெட்டிலைப்பாய்த் திருத்தலமும் அதன் வளர்ச்சியும் (செல்லப்பா நடராசா), சமய வாழ்வியல் (சிவமகாலிங்கம்), எடுத்த மானிடப் பிறவியின் பயனை எய்துவர் அவர்க்கு மறுமையும் இனிமே-கவிதை (மகாலிங்கசிவம் பார்வதிநாதசிவம்), நெட்டிலைப்பாய் நின்மலரே போற்றி போற்றி-பதிகம் (இ.முருகையன்), திருமணங்களில் அறுகரிசி இடல் (ச.லலீசன்), நெட்டிலைப்பாய்ப் பிள்ளையாரும் ஐயர் பாடசாலையும் (வை.க.சிற்றம்பலம்), சைவத் திருத்தலங்கள் அன்றும் இன்றும் (மு.திருநாவுக்கரசு), தெய்வ நம்பிக்கை (பொ.இலங்கநாதபிள்ளை), திருமுருகாற்றுப்படைக்கு நாவலர் எழுதிய உரை (எஸ்.சிவலிங்கராஜா), நெட்டிலைப்பாய்த் திருத்தலத்திற்கு சிறப்பான இரண்டாவது பாதை அமைந்த வரலாறு (சுப்பிரமணியம் விசுவநாதன்), இராஜகோபுரமும் மணிமண்டபமும் (சு.பரம்சோதி), என்கடன் பணி செய்து கிடப்பதே (இளைஞர் அணி), நெட்டிலைப்பாய் ஸ்ரீ கணேஷா பாலர் பாடசாலையும் அதன் வளர்ச்சியும் (திருமதி நாகேஸ்வரி சண்முகரத்தினம்), திருஊஞ்சற் பாக்கள் ஆகிய ஆக்கங்களையும் உள்ளடக்குகின்றது. 28.10.2017 அன்று லண்டன் சைவ முன்னேற்றச் சங்கத்தின் நாற்பதாவது ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்ட வேளை வெளியிடப்பட்ட சிறப்பு மலர் இதுவாகும். பல்வேறு பிரமுகர்களின் வாழ்த்துரைகள், ஆசியுரைகளுடன் வெளிவந்துள்ள இம்மலரில் சைவ மரபு சிவாகமங்களை அடிப்படையாகக் கொண்டது (ச.பத்மநாதன்), இங்கிலாந்துப் புலம்பெயர் தமிழ்மொழி தமிழிலக்கிய வளர்ச்சியில் சைவமுன்னேற்றச் சங்கத்தின் பங்களிப்பு (றீற்றா பற்றிமாகரன்), கறை கண்டன் உறை திருக்கோவில் திருக்கோணேஸ்வரம் (சாவித்திரி ஆனந்தன்), சிவயோக சுவாமிகள் (அருளாம்பிகை குணராசா), ஈசன் பாதத்தை நேசமுடன் தொழுவோம் (பாலன் சுதாகரன்), பஞ்சபுராணம்: அன்றைய மரபும் இன்றைய நிலையும் (செல்லத்தம்பி சிறீக்கந்தராஜா) ஆகிய சிறப்புக் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன

ஏனைய பதிவுகள்

11229 திருவாதவூரடிகள் புராணம்.

கடவுண் மாமுனிவர் (மூலம்), ஸ்ரீமத் ம.க.வேற்பிள்ளை (விருத்தியுரை). யாழ்ப்பாணம்: ம.வே.திருஞானசம்பந்தப் பிள்ளை, தமிழ்ப் போதகாசிரியரும் இந்து சாதனப் பத்திராசிரியரும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, 3வது பதிப்பு, 1939, 1வது பதிப்பு, 1895, 2வது பதிப்பு,