மலர்க் குழு. யாழ்ப்பாணம்: ஸ்ரீ இராஜராஜேஸ்வரி (பேய்ச்சி) அம்பாள் ஆலயப் பரிபாலன சபை, திருப்பணிச் சபை, நாயன்மார்கட்டு, 1வது பதிப்பு, ஜனவரி 2020. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 672 B, காங்கேசன்துறை வீதி).
vi, 157 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 26.5×19.5 சமீ.
30.01.2020 அன்று இடம்பெற்ற மேற்படி ஆலயத்தின் பஞ்சதள இராஜகோபுரத் திருக்குடமுழுக்கு விழாவையொட்டி வெளியிடப்பட்ட சிறப்பு மலர். இம்மலர்க்குழுவில் பேராசிரியர் அ.சண்முகதாஸ், பேராசிரியர் ச.மனோன்மணி, முனைவர் திருநாவுக்கரசு கமலநாதன், முனைவர் சுகந்தினி முரளிதரன், திரு. இ.அரசகுலசூரியர், திரு. பரநிருபசிங்கம் இறையனார் ஆகியோர் பணியாற்றியுள்ளனர். இம்மலரில் மஹா கும்பாபிஷேக கிரியை விளக்கம் (சிவஸ்ரீ சதா மகாலிங்க சிவக்குருக்கள்), சுவாமி விவேகானந்தர் கால் பதித்த மண் (ஆறு திருமுருகன்), யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டு ஸ்ரீ இராஜராஜேஸ்வரி (பேய்ச்சி) அம்பாள் திருக்கோயில் உருவத் திருமேனிகள் (பேராசிரியர் ப.கோபாலகிருஷ்ண ஐயர்), யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டு ஸ்ரீ இராஜராஜேஸ்வரி (பேய்ச்சி) அம்பாள் ஆலய அமைப்பு (சி.ரமணராஜ்), யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டு அருள்மிகு ஸ்ரீ பிச்சாடனமூர்த்தி ஆலய வரலாறும் வளர்ச்சியும் (ப.மகேந்திரதாசன்), பேய்ச்சியம்மன் அருளாட்சியின் அற்புதங்கள் (க.இராஜாம்பிகை), அம்பிகையும் மானசீக உருவமும் (இராசா அரசகுலசூரியர்), அற்புதம் (மு.மனோகர்), வழிபாட்டில் பக்தி (இறையனார் பரநிருபசிங்கம்), திருக்கோயிற் கலைகள் (சுகந்தினி சிறிமுரளிதரன்), நாயன்மார்கட்டில் திண்ணைப் பள்ளிக்கூடம் (கே.மனோநாயகம்), நாயன்மார்கட்டு சைவசமய அபிவிருத்திக் கழகம் (தி.கமலநாதன்), வரலாற்றுப் புகழ் பேசும் நாயன்மார்கட்டு (இ.பாலசுந்தரம்), பண்பாட்டுக் கிராமங்களின் வரிசையில் நாயன்மார்கட்டு (செ.கிருஷ்ணராஜா), பேய்ச்சி அம்மன் வழிபாடும் நாயன்மார்கட்டும் (ச.மனோன்மணி), ஈழத்தில் பெரியாச்சி-தொன்மையும் தொடர்ச்சியும் (நா.சண்முகலிங்கன்), புள்ளிச் சட்டிக்காரி அம்மன் (அ.கா.பெருமாள்), பேய்ச்சி அம்மன் அந்தாதி (நாயன்மார்கட்டு இ.குகதாசன்), தாயின் கழலிணைக்கோர் தமிழிசைமாலை (நாயன்மார்கட்டு இ.குகதாசன்), ஆலயத் திருப்பணிச்சபையின் பொருளாளரின் வாழ்த்தும் நன்றியும் (இ.ஸ்ரீகந்தபாலன்) ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன.