மு.திருஷி. தெல்லிப்பழை: திருமதி அ.சீதாலட்சுமி, திருஷி ஈச்சுரம், பன்னாலை, 1வது பதிப்பு, 1970. (சுன்னாகம்: முத்தையா சபாரத்தினம், திருமகள் அழுத்தகம்).
(4), 40 பக்கம், விலை: ரூபா 10.00, அளவு: 18×12 சமீ.
225 செய்யுள்களை உள்ளடக்கிய திருமந்திரப் பாடல்கள். சொற்றிறம்பாமை, பதி வலியில் வீரட்ட மெட்டு, இலிங்கப் புராணம், தக்கன் வேள்வி, பிரளயம், சக்கரப் பேறு, எலும்புங் கபாலமும், அடிமுடி தேடல், சர்வ சிருஷ்டி, திதி, சங்காரம், திரோபாவம், அநுக்கிரகம், கெற்பைக் கிரியை, மூவகை யாருயிர் வர்க்கம், பாத்திரம், அபாத்திரம், தீர்த்தம், திருக்கோயிலிழிவு, அதோமுக தெரிசனம், சிவநிந்தை, குருநிந்தை, மயேசுர நிந்தை, பொறையுடைமை, பெரியோரைத் துணைக்கோடல், அட்டாங்க யோகப்பேறு, வாழ்த்து, ரேப்தி செந்தமிட்டொகுதி, சரஸ்வதி துதி ஆகிய செய்யுட் தலைப்புகளில் இந்நூலிலுள்ள செய்யுட்கள் தொகுக்கப்பட்டுள்ளன. பன்னாலை திருஷீச்சரம் ஆலயத்தின் திருப்பணிக்கு உதவும் வகையில் இந்நூலின் மூலம் பெறப்படும் நிதி தம்ப மண்டபம், வசந்த மண்டபம், யாகசாலை ஆகியவற்றின் புனருத்தாரணத்திற்குப் பயன்படுத்தப்படும் என்ற குறிப்பும் காணப்படுகின்றது.