16129 ஆளுடைய அடிகள் அருளிய திருவெம்பாவை : பாட்டும் பொருளும் பயனும் திருப்பள்ளியெழுச்சியுடன்.

எம்.எஸ்.ஸ்ரீதயாளன் (உரையாசிரியர்). கொழும்பு: எம்.எஸ்.ஸ்ரீதயாளன், 1வது பதிப்பு, டிசம்பர் 2009. (தெகிவளை: காயத்ரி பப்ளிக்கேஷன், த.பெ. இல. 64).

24 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×15 சமீ.

திருவெம்பாவை, மாணிக்கவாசக சுவாமிகளால் திருவண்ணாமலைத் திருத்தலத்திலே அருளிச்செய்யப்பட்டது. இருபது பாடல்களைக் கொண்ட திருவெம்பாவை மார்கழித் திருவாதிரைக் காலத்தில் ஓதப்படுவதாகும். பாவை என்பது பெண்-சக்தி: உமா தேவி எனப் பொருள்படும். அப்பாவையானவள் எம்மை ஈடேற்றும் விருப்புடையவள், தன்னிலைமையை மண்ணுயிர்களும் அடைந்து இன்புறவேண்டும் என்றும் அவாவுடையவள். ‘தன்நிலைமை மண்ணுயிர்கள் சார-தரும் சக்தி பின்னமிலான் எங்கள் பிரான்” என்ற உமாபதி சிவாச்சாரியார் திருவருட்பயன் பாடல் சக்தியின் தன்மையைக் கூறுகின்றது. எனவே தான் அந்தப் பேரருட் சக்தியை எம்முடன் உண்டான உரிமை பற்றி ‘எம்பாவை” என்று மணிவாசகர் விளிக்கிறார். ‘திரு” என்ற சொல் அப்பாவையின் பெருமையை விளக்கும் அடைமொழியாக வந்தது. சக்தியின் அருட்சிறப்பை விதந்து போற்றும் பாடல்களே ‘திருஎம்பாவை” என்ற அருட்கனிகளாகும்.

ஏனைய பதிவுகள்