16131 ஈழநாட்டிற் புராணபடனச் செல்வாக்கு: ஓர் ஆய்வு.

இரா. வை.கனகரத்தினம். யாழ்ப்பாணம்: ஏழாலை-அத்தியடி புவனேஸ்வரி அம்பாள் தேவஸ்தான வெளியீடு, 1வது பதிப்பு, வைகாசி 1985. (யாழ்ப்பாணம்: மஹாத்மா அச்சகம், ஏழாலை மேற்கு, ஏழாலை).

32 பக்கம், விலை: ரூபா 15.00, அளவு: 26.5×18.5 சமீ.

துர்க்கா துரந்தரி செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் மணிவிழாச் சபை வெளியிட்ட ‘சிவத்தமிழ் ஆராய்ச்சிக் கட்டுரைகள்” என்னும் தொகுதியில் ‘ஈழத்திற் புராண படனச் செல்வாக்கு-ஓர் ஆய்வு” என்னும் தலைப்பில் ஆசிரியரின் புராண படனம் பற்றிய இந்த ஆய்வும் இடம்பெற்றிருந்தது. இவ்வாய்வே தனிநூலாக இங்கு வெளியிடப்பட்டுள்ளது. பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ் விரிவுரையாளர் திரு. இரா.வை.கனகரத்தினம் அவர்கள் ஆலயந் தோறும் நடைபெற்று வந்த புராணப் படிப்பு உள்ளிட்ட படிப்புகளைப் பற்றி விரிவானதொரு ஆராய்ச்சியை இங்கு மேற்கொண்டுள்ளார். குறித்த ஆய்வுக் கட்டுரையை எழுதியுள்ள ஆசிரியர், புராண படனங்களில் கையாளப்பட்டு வரும் பழைய, புதிய நடைமுறைகளை சம்பந்தப்பட்ட நூல்கள் பலவற்றில் இருந்தும் ஆதாரங்களுடன் எடுத்துக்காட்டி அகராதி முறையில் விளக்கியிருக்கிறார். ஈழநாட்டிற் புராண படனச் செல்வாக்கு எவ்வாறு வளர்ந்து வந்தது என்பது பற்றி ஆய்வு மேற்கொள்வோருக்கு இவ்வாய்வுக் கட்டுரை நல்லதொரு திறவுகோலாய் அமையும் என்று பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்கள் ஆசியுரையிற் குறிப்பிடுகின்றார்.

ஏனைய பதிவுகள்

15499 எதிர் நீச்சல்: மர்ஹீம் கவிஞர் வீ.எம்.நஜிமுதீனின் கவிதைகள்.

வீ.எம்.நஜிமுதீன் (மூலம்), கே.எம்.எம்.இக்பால், எஸ்.மஜீன் (தொகுப்பாசிரியர்கள்). மூதூர்: எம்.எம்.கே.பவுண்டேஷன், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2011. (கிண்ணியா-2: குரல் பதிப்பகம்). 46 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ. மூதூர் கிராமத்தின் புகழ்பூத்த இஸ்லாமியக்