கனகசபாபதி நாகேஸ்வரன். பெலிகுல்லோயா: க.நாகேஸ்வரன், சிரேஷ்ட விரிவுரையாளர், மொழித்துறை, சப்ரகமுவ பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 2007. (கொழும்பு 13: லக்ஷ்மி அச்சகம், 195, ஆட்டுப்பட்டித் தெரு).
(20), 88 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21×13.5 சமீ., ISBN: 978-955-98962-5-8.
சக்தி வழிபாட்டின் பரிணாமங்கள் குறித்த தமிழ் இலக்கிய வரலாற்று ஆய்வு. நூலாசிரியர் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மொழித்துறை சிரேஷ்ட விரிவுரையாளராகப் பணியாற்றுபவர். இவரது 5ஆவது நூல் இதுவாகும். இலக்கியப் பண்பாட்டியலில் நிலவும் கருத்துநிலைக்கும், வழிபாட்டுக்குமுள்ள தொடர்பு, அகமுகமாகக் கண்ணகி வழிபாட்டு அம்சங்கள், வரலாற்றடிப்படையில் சோழப் பேரரசர்களது இராஜராஜேஸ்வரி அம்மன் வழிபாடாக மலர்ச்சியுற்ற பாங்கு, இயற்கையின் வெஞ்சினமும், சீற்றமும் அதனடியாக நிகழ்ந்த பயன்களும் அவை குறித்த சிந்தனைகளும் என்ற மூன்று பரிமாணங்களில் இந்நூல் ஆய்வுசெய்கின்றது. விக்கிரகவியல், ஆகமவியல் அடிப்படையிலன்றி, இலக்கியப் பண்புகளின் அடிப்படையிலும், மானுட மேன்மைகளின் அடிப்படையிலும் இந்நூலிலே கருத்துகள் இடம்பெறுகின்றன. பண்பாட்டு ஆய்வுக்கான மூலங்கள், கற்பின் சீற்றமும் கடலின் சீற்றமும்(சுனாமிப் பேரலைகள்), மட்டக்களப்பில் கண்ணகை அம்மன் வழிபாடு, அம்மன் படிமங்களும் பிரதிமாலக்ஷணங்களும் ஆகிய இயல்களின் கீழ் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. நூலின் இறுதியில் நிறைவுரை, அடிக்குறிப்புகள் என்பனவும் காணப்படுகின்றன. (இந்நூல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 172726).