16133 கதிர் ஒளி : சோ.க.ஐயம்பிள்ளை கதிர்காமு அவர்களின் ஞாபகார்த்த வெளியீடு.

மலர்க் குழு. கனடா: சோ.க.ஐயம்பிள்ளை கதிர்காமு குடும்பத்தினர், 1வது பதிப்பு, மே 2008. (அச்சக விபரம் தரப்படவில்லை).

152 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.

புங்குடுதீவு, 9ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவில் வசித்து வந்தவரும் இலங்கையில் முன்னாள் தபால் அதிபராகப் பணியாற்றியவருமான அமரர் சோ.க.ஐயம்பிள்ளை கதிர்காமு (21.07.1944-09.04.2008) அவர்களின் ஞாபகார்த்த வெளியீடாக 09.05.2008 அன்று வெளியிடப்பட்டது. விநாயகர் வழிபாடு, திருமுறைகள், சிவன் வழிபாடு, முருகன் வழிபாடு, தேவி வழிபாடு, ஆகிய பிரிவுகளின் கீழ் பக்திப் பாவகைகள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 70336).

ஏனைய பதிவுகள்

12349 – இளங்கதிர்: 11ஆவது ஆண்டு மலர் (1958-1959).

ச.அடைக்கலமுத்து (இதழாசிரியர்). பேராதனை: தமிழ்ச் சங்கம், இலங்கைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1959. (கொழும்பு 12: சுதந்திரன் அச்சகம், 194ஏ, சில்வர் ஸ்மித் வீதி). (17), 196 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை,