கா.கதிரவேல் (மூலம்), க.வைத்தியலிங்க பிள்ளை (பரிசோதித்தவர்). குருநாகல்: சி.க.ஆறுமுகம், 1வது பதிப்பு, 1927. (கொழும்பு: சி.க.ஆறுமுகம், சிவகுக அச்சியந்திரசாலை, இல. 9, குவாரி ரோட்).
9 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×10 சமீ.
குருநாக்கற்பதியில் அடியார்களின் மனோபீஷ்டத்தை நிறைவேற்றுவான் பொருட்டுத் திருக்கோயில் கொண்டருளிய ஸ்ரீ சுப்பிரமணியப் பெருமானார் மீது பாடப்பெற்ற தோத்திரப் பதிகம். குருநாக்கற்பதியில் தெளியாக்கொண்ணை வாழ் கா.கதிரவேல் அவர்கள் இயற்றிய இப்பக்தி இலக்கியம், யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை வித்துவான் ஸ்ரீமான் க.வைத்தியலிங்க பிள்ளை அவர்களால் நன்கு பரிசோதிக்கப்பெற்று, குருநாக்கல் திரு. சி.க.ஆறுமுகம் அவர்களால் பதிப்பிக்கப் பெற்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 0035).