16137 சங்கடங்களை அகற்றி மனச்சாந்தியளிக்கும் துதிப்பாடல்களும் மந்திரங்களும்.

வி.செல்வரத்தினம். வட்டுக்கோட்டை: வி.செல்வரத்தினம், அப்புக்காத்து வளவு, அராலி மத்தி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2013. (யாழ்ப்பாணம்: ஜே.எஸ். பிரின்டர்ஸ், சில்லாலை வீதி, பண்டத்தரிப்பு).

xii, 142 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 20.5×14.5 சமீ.

கலியுகத்தில் இறைவனை வழிபடும் எளிய வழி அவன் திருநாமத்தைப் புகழ்ந்து பாடுவதே என ஞானிகளும் இறைநெறியாளர்களும் கூறியுள்ளனர். அந்த வகையில் மக்கள் இறையருள்பெற்று அமைதி, ஆனந்தம் நிறைந்த அருள்வாழ்வு வாழவேண்டும் என்ற நன்நோக்கத்துடன் மேற்படி நூலை ஆன்மீக எழுத்தாளரும் பிரபல கணித-விஞ்ஞான நூலாசிரியருமான வி.செல்வரத்தினம் எழுதியுள்ளார். (இந்நூல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 201800).

ஏனைய பதிவுகள்

17744 இனிய மனங்கள் இணையும்போது.

தமிழினி (இயற்பெயர்: திருமதி டெய்சி தர்மராணி ஹென்ஸ்மன்). கனடா: திருமதி டெய்சி தர்மராணி ஹென்ஸ்மன், 1வது பதிப்பு, 2010. (அச்சக விபரம் தரப்படவில்லை). xv, 235 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×12.5 சமீ.

16364 வெற்றிமுரசு பாடல்கள் (தமிழீழ எழுச்சிப் பாடல்கள்).

புதுவை அன்பன் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: கொள்கை முன்னெடுப்புப் பிரிவு, தமிழீழ விடுதலைப் புலிகள், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (முல்லைத்தீவு: அறிவு அமுது பொத்தகசாலை, புதுக்குடியிருப்பு). 16 பக்கம், விலை: ரூபா 15.00,