ம.முத்துக்குமாரசாமிக் குருக்கள். யாழ்ப்பாணம்: ச.சோமசுந்தர ஐயர், புலோலி பசுபதீசுர சுவாமி கோவில், புலோலி, 3வது பதிப்பு, பங்குனி 1940, 1வது பதிப்பு 1879, 2வது பதிப்பு, ஆங்கீரச வருடம் 1932, (யாழ்ப்பாணம்: இலங்கைநேச முத்திராஷரசாலை).
(13) பக்கம், விலை: 10 சதம், அளவு: 19.5×11.5 சமீ.
யாழ்ப்பாணம் புலோலி ஆரிய திராவிட மஹாபண்டிதர் பிரமஸ்ரீ ம.முத்துக்குமாரசாமிக் குருக்கள் மகாதேவ ஐயர் (1853 – 1936) யாழ்ப்பாணம், புலோலியைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை மகாதேவ ஐயர். இவர் வண்ணார்பண்ணை ஐயாத்துரை ஐயரிடம் சமஸ்கிருதத்தையும் காவிய வியாகரணங்களையும் கற்றதுடன் உயர்தரத் தமிழ் இலக்கணங்களை உடுப்பிட்டி சிவசம்புப் புலவரிடம் கற்றார். இவர் சிவபெருமான் அலங்காரம், பசுபதிசூரர் அந்தாதி போன்ற நூல்களை இயற்றினார். புலோலி பசுபதீசுரசுவாமி கோவிலின் அர்ச்சகராக இருந்தவர். 53 ஆண்டுகளுக்கு முன்னர் புலோலி பசுபதீசுரசுவாமி கோவிலில் பாடியரங்கேற்றிய இந்நூல் இலங்கைநேசன் முத்திராட்சரசாலையிற் பதிப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டிருந்தது. அந்நூலின் பிரதிகள் கைவசமற்றநிலையில் இரண்டாம் பதிப்பு 1932இல் வெளிவந்தது. இப்பிரதி முன்னைய இரண்டாம் பதிப்பின் மீள்பதிப்பாகும். (இந்நூல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் P 5363).