16143 திருநல்லூர்த் திருப்புகழ்.

தவ.தஜேந்திரன். யாழ்ப்பாணம்: தவ.தஜேந்திரன், இருபாலை, 1வது பதிப்பு, ஆடி 2022. (யாழ்ப்பாணம்: மதி அச்சியந்திரசாலை, இல. 10, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்).

(4), 24 பக்கம், ஒளிப்படம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17×12.5 சமீ., ISBN: 978-624-96508-1-9.

‘பூர்வகாலத்தில் தாழிடப்பட்ட கதவமொன்று மெல்லத்திறந்து கொண்டது. நல்லூர் என்னும் சிதாகாசப் பெருவெளியில் உயர்ந்து விரிந்தது உந்திக் கமலம். மௌனத் தவத்தினால் மனதை எரித்தேன். உயிரின் மூலத்துள்ளொளிரும் முருகப் பிரபையின் முன் கரங்குவித்துச் சிரம் பணிந்தேன். நல்லைக் குமரனின் பாடலாய் அவிழ்ந்தேன். கனவுகளிலும் காதோடு பேசும் காற்றின் மெல்லிய பரிசங்களிலும் ஆறுமுக ஆசான் தன் செய்திகளை வழங்கினார். அவற்றைக் கவிதை செய்தேன். அதன் பொருட்டுத் திருப்புகழ் என்னும் இலக்கிய வடிவத்தை இரவல் தந்த அருணகிரி முனிவருக்கு வணக்கங்கள். சண்முக யாத்திரையில் சிறியேன் கண்டடைந்த இப்பன்னிரு புகட்பாக்களையும் தீராக் காதலுடன் நல்லூரானின் திருவடியிற் சமர்ப்பிக்கிறேன்.” (தவ.தஜேந்திரன், முகவுரையில்). நூலுடன் இணைந்ததாக இப்பக்திப் பாடல்கள் பன்னிரெண்டும், வசாவிளான் தவமைந்தன், நல்லூர் சிவஸ்ரீ விஸ்வப்பிரசன்ன குருக்கள், முல்லையூர் க.வர்ஜிகன், இணுவையூர் அ.அமிர்தசிந்துஜன் ஆகியோரால் பாடப்பெற்று இறுவட்டாகவும் நூலுடன் இணைக்கப்பட்டுள்ளது. பாடல்களுக்கான வயலின் இசையை இணுவையூர் சு.கோபிதாஸ், மிருதங்க இசையை இணுவையூர் க.கஜன் ஆகியோர் வழங்கியுள்ளனர். பிரியன் தம்பிராஜா ஒலிப்பதிவினையும் ஒலித்தொகுப்பினையும் மேற்கொண்டுள்ளார்.

ஏனைய பதிவுகள்

Обзор лучших настольных развлечений на Мостбет – рулетка, блэкджек и баккара

Каждый любитель азартных забав знает, что находить оптимальные возможности для игры – это целая наука. Одними из самых захватывающих форматов выступают азартные мероприятия, которые позволяют

Parx Hitenje

Vsebina Sportingbet šport – Boljša programska oprema Total North carolina Pony Rushing Najboljše popolnoma brezplačne stave na konjske dirke Battle Bookhorse Rushing Inside Las Vegas