சிறுமணவூர் முனுசாமி (மூலம்), சோதிடவிலாச புத்தகசாலை (பதிப்பு). யாழ்ப்பாணம்: சோதிட விலாச பத்தகசாலை, கொக்குவில், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: சோதிட விலாச அச்சியந்திரசாலை, கொக்குவில்).
(4), 24 பக்கம், விலை: ரூபா 5.00, அளவு: 15.5×12.5 சமீ.
திருச்சிற்றம்பலம் போற்றி, நடராஜப் பத்து, சிவநாமாவழி (அம்பலத்தரசே) ஆகிய மூன்று செய்யுள்களுடன் இந்நூல் கையடக்கப் பிரசுரமாகத் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. நடராசப் பத்து, சிதம்பரம் நடராசர் மீது சிறுமணவூர் முனுசாமி என்பவரால் பாடப்பட்டது. விருத்த வகையைச் சேர்ந்த பத்துப் பாடல்களைக் கொண்டதாக இது அமைந்துள்ளது. இப்பாடல்கள், “ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே” என முடிவதாக அமைந்துள்ளன. இப்பாடல்களை இயற்றிய முனுசாமி முதலியார், திருவள்ளூர் தாலுக்காவில் தற்போது சிறுமணைவை என வழங்கப்படும் ஊரிலே சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு நடராசர் அடியவராவார்.