வி.வேல்முருகு, பார்வதி சுரேஷ்குமார், தி.நாகராசா. யாழ்ப்பாணம்: புலோலி பர்வதவர்த்தனி சமேத பசுபதீஸ்வரர் ஆலயம், 1வது பதிப்பு, 2017. (அச்சக விபரம் தரப்படவில்லை).
(8), 487 பக்கம், ஒளிப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×22.5 சமீ.
1870இற்கும் 1985இற்கும் இடையேயுள்ள காலகட்டத்தில் புலோலிப் பதீஸ்வரர் மேற் பாடப்பெற்ற எட்டு இலக்கிய வடிவங்கள் இந்நூலில் முதன்மைபெறுகின்றன. இரண்டு பிரிவுகளாகத் தொகுக்கப்பட்டுள்ள இந்நூலின் முதற் பிரிவு பக்திப் பாடல்களும் அந்தாதிக் கீர்த்தனைகளும் அடங்கியதாகும். இரண்டாவது பிரிவில் சமயம் சார்ந்த திருநந்தவனத்தில் வளர்க்கக்கூடிய தாவரப் பூச்செடிகளின் பட்டியல்களை திரு. முத்துக்குமாரசாமி சர்மா அவர்கள் வழங்கியுள்ளார். மேலும் பேராசிரியர்கள் அ.சண்முகதாஸ், ஆ.வேலுப்பிள்ளை ஆகியோரின் அறிவுத் திறன் மிக்க முகவுரைகள், பசுபதி ஈசனைப் பற்றி வியக்கத் தக்க பக்திப்பாடல்களைப் பற்றியும் அறியமுடிகின்றது.