16157 மாணிக்கவாசகர் புராணம் (வசனம்).

வ.கணபதிப்பிள்ளை. சென்னை: சே.வெ.ஜம்புலிங்கம்பிள்ளை, திருமயிலை (மயிலாப்பூர்), 2வது பதிப்பு, கார்த்திகை 1933, 1வது பதிப்பு, 1895. (சென்னை: சாது அச்சுக்கூடம், இராயப்பேட்டை).

xi, 154 பக்கம், விலை: 10 அணா, அளவு: 18.5×13 சமீ.

சைவசமயாசாரியராகிய மாணிக்கவாசக சுவாமிகள் புராண வசனமாகிய இச்சிறுநூல் வடமொழி அலாசிய மான்மியத்தைத் தழுவியும் ஒரு சிறிய தமிழ்த் திருவிளையாடற் புராணம், திருவாதவூரர்; புராணம் முதலியவற்றை ஆதரவாகக் கொண்டும் 1875இல் எழுதி அச்சிற் பதிப்பிக்கப்பட்டது. அந்நூலின் மீள் பதிப்பே இதுவாகும். பாயிரம், மந்திரிச் சருக்கம், திருப்பெருந்துறைச் சருக்கம், குதிரையிட்ட சருக்கம், திருவம்பலச் சருக்கம், புத்தரை வாதில் வென்ற சருக்கம், திருவடி பெற்ற சருக்கம், அரும்பத விளக்க அகராதி, சுவாமிகள் துதி ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்துப் புலோலியைச் சேர்ந்த வல்லிபுரநாதபிள்ளை கணபதிப்பிள்ளையவர்கள், உடுப்பிட்டி சிவசம்புப் புலவரிடம் தமிழ் இலக்கிய இலக்கணம் நன்கு கற்றுத் தேர்ந்தவர். தமிழில் பாண்டித்தியம் பெற்ற பின்னர் சென்னைக்குச் சென்று அங்கு ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகியவற்றில் கற்றுத்தேறிய பின்னர் காஞ்சிபுரம் பச்சையப்பா வித்தியாசாலைத் தமிழ்ப் பண்டிதராகப் பணியாற்றியிருந்தார். பின்னர் திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரிப் பிரதம தமிழாசிரியராக நியமிக்கப்பட்டார். 1895இல் அங்கேயே இறைபதமடைந்தார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 0991).

ஏனைய பதிவுகள்

12171 – முருகன் பாடல்: ஐந்தாம் பகுதி.

தொகுப்பாளர் குழு. கொழும்பு 11: தெட்சணத்தார் வேளாளர் மகமை பரிபாலன சொசைட்டி லிமிட்டெட், 98 ஜிந்துப்பிட்டி தெரு, 1வது பதிப்பு, ஆவணி 1992. (சென்னை 600002: காந்தளகம், 4, முதல்மாடி, 834, அண்ணா சாலை).

16282 பாட்டி சொன்ன இலங்கையின் மரபுக் கதைகள்.

பொன்.குலேந்திரன். கனடா: குவியம் வெளியீடு, 2796, Keyness Crescent, Mississauga, Ontario, L5N3A1, 1வது பதிப்பு, ஏப்ரல் 2016. (மின்நூல் வடிவம்). 112 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ. இந்நூலில் காணப்படும்