16161 முருகும் முருகனும்.

இரத்தினம் நித்தியானந்தன். லண்டன்: இ. நித்தியானந்தன், 179, Norval Road, Wembley, Middlesex, HA0 3SX, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2012. (லண்டன்: ஆர்.எஸ்.பிரின்டர்ஸ், 88, Horsenden Lane North, Greenford, Middlesex UB6 7QH).

14 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.

2012இல் மலாயாப் பல்கலைக்கழகத்தில் ஓகஸ்ட் 9-12 திகதிகளில் நடந்தேறிய அனைத்துலக முருகபக்தி மாநாட்டில் வாசிப்பதற்காகச் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரையின் நூல் வடிவம் இதுவாகும். யாழ்ப்பாணம் சித்தன்கேணியைச் சேர்ந்த கலாநிதி இரத்தினம் நித்தியானந்தன் கொழும்பு பல்கலைக் கழகத்தில் (1963-1971) இரசாயன விரிவுரையாளராகவும் பிரித்தானியாவில்  செயின்ட் மேரி மருத்துவப் பள்ளி, இலண்டன் பல்கலைக்கழகத்தில் (1972-1993) முதுநிலை அறிவியல் ஆய்வாளராகவும், மேற்கு இலண்டன் தமிழ்ப் பாடசாலையில் (1982-1989) தலைமை ஆசிரியராகவும், பின்னர் இலண்டன் தமிழ் நிலைய தலைமையாசிரியராகவும் (1990-2012), இரத்தினம் அறக்கட்டளையின் தலைவராகவும் (2005 முதல் இன்று வரை) பணியாற்றி கல்விப்பணிகளிலும், சமூகச் செயற்பாடுகளிலும் தம்மை முழுமையாக ஈடுபடுத்திவந்தவர்.

ஏனைய பதிவுகள்

16807 பேராசிரியர் க.கைலாசபதியும் திறனாய்வும், பேராசிரியர் வி.செல்வநாயகத்தின் தமிழ் இலக்கிய வரலாறும் தமிழ் உரைநடை வரலாறும்.

ஈழக்கவி (இயற்பெயர்: ஏ.எச்.எம்.நவாஸ்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஆடி 2018. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). ii, 38 பக்கம்,