மா.த.ந.வீரமணி ஐயர். யாழ்ப்பாணம்: க.இரஞ்சிதநாயகி, க.இராஜாம்பிகை, இணுவில், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2020. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 672 B, காங்கேசன்துறை வீதி).
(2), 12 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×16 சமீ.
பிரம்மஸ்ரீ வீரமணி ஐயர் யாழ்ப்பாணம் இணுவிலில் 15.10.1931இல் பிறந்தவர். இணுவில் சைவப்பிரகாச வித்தியாசாலை, மானிப்பாய் இந்துக் கல்லூரி ஆகியவற்றில் பயின்றவர். தமிழகத்தில் இசை, நடனம், நாடகம் என்பவற்றில் ஈடுபாடுகொண்டு திருமதி ருக்மணிதேவி அருண்டேலிடம் பரத நாட்டியமும், என்.டி. இராமநாதனிடம் இசையும், தனது சாஹித்திய குருவான திரு பாபநாசம் அவர்களிடம் மேலதிக இசையும் கற்றுத் தேர்ந்தவர். இவர் இந்தியாவில் கற்கும்போது ‘கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்” என்று ஆரம்பிக்கும் ஆனந்த பைரவி இராகத்தைப் பல்லவியில் கொண்டமைந்து நான்கு இராகங்கள் முத்திரை அமைக்கப்பெற்ற அவரது இராக மாலிகைக் கீர்த்தனை உலகப் புகழ்பெற்றது. யாழ்ப்பாணம் நல்லூர் நாயன்மார்கட்டு அருள்மிகு இராஜராஜேஸ்வரி (பேய்ச்சி) அம்பாள் பெயரில் அவர் பாடியருளிய அந்தாதிக் கீர்த்தனை இந்நூலில் இடம்பெற்றுள்ளது. ஏற்கெனவே இவ்வாலயத்திற்காக ஊஞ்சல் பாட்டும், கீர்த்தனைப் பாடல்களும் எழுதி வழங்கியுள்ளார்.